For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நாளிதழ் அலுவலகத்தில் புகுந்து தாக்கி, கொலை மிரட்டல் விடுத்த ஈரோடு பெண் மேயர் மல்லிகா

By Mayura Akilan
Google Oneindia Tamil News

Mallika Paramasivam
ஈரோடு: ஈரோட்டில் காலைக்கதிர் நாளிதழ் அலுவலகத்தில் புகுந்து மேயர் மல்லிகா பரமசிவம் நடத்திய தாக்குதல் சம்பவத்தில் போட்டோகிராபர் காயமடைந்தார். மேயர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் ஈரோடு நகர பத்திரிக்கையாளர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

ஈரோடு மாநகர மேயராக இருப்பவர் அதிமுகவைச் சேர்ந்த மல்லிகா பரமசிவம். இவர் அதிமுக அமைச்சர் ராமலிங்கத்தின் ஆதரவாளர் என்று கூறப்படுகிறது. துணை மேயராக இருக்கும் கே.சி.பழனிச்சாமி அமைச்சர் செங்கோட்டையனின் ஆதரவாளர் என்பதால் இருவருக்கும் இடையே மோதல் இருந்து வருகிறது.

இந்த நிலையில் திங்கட்கிழமையன்று மாநகராட்சி கட்டடங்களை வீடியோ கான்பரன்ஸ் மூலம் முதலமைச்சர் ஜெயலலிதா திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற மேயரை அதிமுகவினர் யாரும் கண்டுகொள்ளவில்லை என்று காலைக்கதிர் நாளிதழ் செய்தி வெளியிட்டது.

இதனால் ஆத்திரம் அடைந்த மேயர் மல்லிகா பரமசிவம், செவ்வாய்கிழமையன்று ஈரோடில் உள்ள காலைக்கதிர் அலுவலகத்தில் புகுந்து, அங்கிருந்த பொருட்களை தள்ளியதாக கூறப்படுகிறது. இந்த சம்பவங்களை புகைப்படம் எடுத்த காலைக்கதிர் புகைப்படக்காரர் சண்முகத்தை அடித்து கீழே தள்ளியுள்ளனர். தடுக்க வந்த செய்தியாளர் கணேசன் என்பவரும் தாக்கப்பட்டார். இதனையடுத்து அவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

மேயரும், அவருடன் வந்தவர்களும் அலுவலகத்தில் இருந்தவர்களுக்குக் கொலை மிரட்டல் விடுத்ததாகவும் கூறப்படுகிறது.

பத்திரிக்கையாளர்கள் ஆவேசம்

இதுதொடர்பாக ஈரோடு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பன்னீர்செல்வத்தை சந்தித்து, காலைக்கதிர் நிர்வாகத்தினர் தங்களுடைய அலுவலகத்தில் அத்துமீறி புகுந்து செய்தியாளர், புகைப்படக்காரர், அலுவலக உதவியாளர்களை அடித்து பொருட்களை சூறையாடியதாக ஈரோடு மேயர் மல்லிகா பரமசிவம், அவரது உதவியாளர் விஜயா, மகளிர் அணியைச் சேர்ந்த இரண்டு பெண்கள் மற்றும் ஓட்டுநர் ஆகியோர் நடவடிக்கை எடுக்குமாறு புகார் கொடுத்துள்ளனர்.

மேயர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஈரோடு நகர பத்திரிக்கையாளர்களும் புகார் மனு அளித்துள்ளனர்.

English summary
A photographer of a Tamil daily sustained injuries after being allegedly physically assaulted by Erode Mayor Mallika on Tuesday, police said. "Kalai Kadir," the daily had allegedly published a report yesterda about a pregnant woman fainting during the inauguration of the municipal corporation’s Maternity Hospital, which was inaugurated by Tamil Nadu Chief Minister Jayalalithaa through video conferencing system on Monday.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X