மகர ஜோதியைக் காணச் சென்று மரணத்தைத் தழுவிய 106 ஐயப்ப பக்தர்கள்

Posted by:
 
Share this on your social network:
   Facebook Twitter Google+ Comments Mail

2011ம் ஆண்டின் தொடக்கத்திலேயே சபரிமலை ஐயப்ப பக்தர்களுக்கு சோதனை காத்திருந்தது. மகர ஜோதியைத் தரிசிக்கச் சென்று திரும்பிய பக்தர்கள் புல்மேடு என்ற இடத்தில் பெரும் கூட்ட நெரிசலில் சிக்கிக் கொண்டனர். இதில் உதைபட்டும், நெரிசலில் மிதிபட்டும் 106 பக்தர்கள் பலியானார்கள். (ஜனவரி 14)

போதிய வெளிச்சம் இல்லாமலும், மிகக் குறுகிய பாதையாக இருந்ததாலும் இங்கு கூட்ட நெரிசல் ஏற்பட்டு விட்டது. மேலும் பொறுப்பில்லாத கேரள வனத்துறையினர், காவல்துறையினர் மற்றும் சபரிமலை தேவஸ்தானத்தாலும் இந்த விபரீதம் ஏற்படக் காரணமாயிற்று.

லட்சக்கணக்கான பக்தர்கள் கால்நடையாக வந்து கொண்டிருந்�� நேரத்தில் கேரளத்தைச் சேர்ந்த ஜீப் ஒன்று கூட்டத்திற்கு மத்தியில் புகுந்து வெளியேற முயன்றதால் ஏற்பட்ட நெரிசல்தான் 106 பேர் பலியாகக் காரணமான விபரீத நெரிசலுக்கு வித்திட்டது.

உயிரிழந்தவர்களில் ஒருவர் பெண், மூன்று குழந்தைகளும் அடக்கம்.

English summary
Tragedy of the year 2011 was Sabarimalai stampede, which killed 106 devotees. The tragedy occured when the devotees returned after witnessing the makara jyothi via Pulmedu.
Please Wait while comments are loading...
Your Fashion Voice

Videos

Advertisement
Content will resume after advertisement