இந்திய ஹாக்கி: பெண்கள், ஆண்கள் அணிகளுக்கு வெற்றி

By:
Subscribe to Oneindia Tamil

டெல்லி: டெல்லியில் நடந்த ஹாக்கி போட்டிகளில், இந்தியாவை சேர்ந்த ஆண்கள் மற்றும் பெண்கள் அணிகள் வெற்றி பெற்றன. ஓலிம்பிக் போட்டிகளுக்காக தயாராகி வரும் இந்திய ஹாக்கி அணிகளுக்கு இந்த வெற்றி பெரும் உற்சாகத்தை அளித்துள்ளது.

பெண்கள் அணி வெற்றி:

டெல்லியில் உள்ள மேஜர் தயன்சந்த் தேசிய மைதானத்தில் இந்தியா, அஜர்பைஜான் பெண்கள் ஹாக்கி அணிகளுக்கு இடையிலான 4 போட்டிகள் கொண்ட ஹாக்கி தொடர் நடந்து வருகின்றது. இதில் நேற்று நடந்த 2வது போட்டியில் இந்திய பெண்கள் அணியின் ரிதுராணி 18வது நிமிடத்திலும், 41வது நிமிடத்தில் சபா அஞ்சும் தலா 1 கோல் அடித்தனர்.

அஜர்பைஜான் அணியில் ஜெங்கோ கிம் 23வது நிமிடத்தில் 1 கோல் அடித்தார். இதன் மூலம் இந்திய அணி 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. இந்திய அணி 0-3 என்ற கோல் கணக்கில் முதல் போட்டியில் வெற்றி பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

ஆண்கள் அணி வெற்றி:

டெல்லி மேஜர் தயன்சந்த் தேசிய மைதானத்தில் இந்தியா, தென் ஆப்பிரிக்கா ஆண்கள் ஹாக்கி அணிக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட ஹாக்கி தொடர் நடந்து வருகின்றது.

இதில் நேற்று நடந்த முதல் போட்டியில், இந்திய அணியின் ஷிவேந்திர சிங் போட்டியின் 15வது நிமிடத்திலும், பிரேந்திர லக்ரா 24வது நிமிடத்திலும், சர்தாரா சிங் 28வது நிமிடத்திலும், உத்தப்பா 53வது நிமிடத்திலும் தலா 1 கோல் அடித்தனர். பதிலுக்கு தென் ஆப்பிரிக்கா வீரர்கள் யாரும் கோல் அடிக்கவில்லை. இதன் மூலம் இந்திய அணி 4-0 என்ற கோல் கணக்கில் போட்டியில் வெற்றிப் பெற்றது.

இந்த போட்டிகளில் வெற்றிப் பெற்றதால், அடுத்த மாதம் துவங்க உள்ள ஓலிம்பிக் போட்டிகளுக்காக தயாராகி வரும் இந்தியா ஹாக்கி அணிகள் உற்சாகம் அடைந்துள்ளன.

பொருத்தமான வரன் தேடுகிறீர்களா? தமிழ்மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!

English summary
Indian men's hockey team has win the first match against South Africa by 4-0 in Test series in Delhi. In women's match, Indian team had 2rd victory over Azerbaijan by 3-0 goal.
Please Wait while comments are loading...