For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

எழும்பூர்-சேலம் எக்ஸ்பிரஸ் ரயில் நேரம் மாற்றம்: தென்னக ரயில்வே அறிவி்ப்பு

Google Oneindia Tamil News

சேலம்: சென்னை எழும்பூர்-சேலம் எக்ஸ்பிரஸ் ரயில் நேரம் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

இது குறித்து தென்னக ரயில்வே வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

சென்னை எழும்பூரில் இருந்து தினமும் இரவு 11 மணிக்கு எழும்பூர்-சேலம் எக்ஸ்பிரஸ் (வண்டி எண் 11063) இயக்கப்பட்டு வருகின்றது. இந்த ரயில் சென்னை விருத்தாசலம் வரை வழக்கமான நேரத்துக்கு இயக்கப்படும்.

விருத்தாசலம் ரயில் நிலையத்தில் இருந்து சேலம் செல்லும் வரை உள்ள நேரத்தில் மட்டும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி விருத்தாசலத்துக்கு அதிகாலை 3.18 மணிக்கு வந்து கொண்டிருந்த ரயில் இனி 3.15 மணிக்கும், வாழப்பாடிக்கு 5.49 மணிக்கும், சேலம் டவுனுக்கு 6.22 மணிக்கும், மார்க்கெட் ஸ்டேஷனுக்கு 6.29 மணிக்கும், சேலம் ஜங்ஷன் ரயில் நிலையத்துக்கு 6.35 மணிக்கும் வந்து சேரும்.

அதேபோல ஈரோட்டில் இருந்து சேலம் வழியாக இயக்கப்பட்டு வந்த பாசஞ்சர் ரயில் (வண்டி எண் 56100) நேரமும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஈரோட்டில் இருந்து காலை 5 மணிக்கு புறப்படும் பாசஞ்சர் ரயில் சேலத்துக்கு காலை 6.30 மணிக்கும், மேட்டூருக்கு 8.05 மணிக்கும் சென்றடையும்.

மேட்டூரில் இருந்து காலை 8.30 மணிக்கு புறப்பட்டு மேச்சேரி ரோடு, தொளசம்பட்டி, ஓமலூர் வழியாக காலை 9.50 மணிக்கு சேலம் வந்தடையும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

English summary
Souther railways has announced that it has changed the timing of Chennai Egmore-Salem express train and another passenger train that starts from Erode.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X