நியூயார்க் நகர போலீஸ் கமிஷ்னர் மகன் மீது பெண் கற்பழிப்பு புகார்

Posted by:
 
Share this on your social network:
   Facebook Twitter Google+ Comments Mail

Rosanna Scotto and Greg Kelly
நியூயார்க்: நியூயார்க் நகர போலீஸ் கமிஷ்னரின் மகனும் பாக்ஸ் தொலைக்காட்சி நிருபருமான கிரெக் கெல்லி மீது பெண் ஒருவர் கற்பழிப்பு புகார் சுமத்தியுள்ளார்.

பாக்ஸ் நிறுவனத்தின் WNYW டிவியின் முன்னணி நிருபரான கிரெக் கெல்லி, நியூயார்க் நகர போலீஸ் கமிஷ்னர் ரேமண்ட் கெல்லியின் மகனாவார்.

43 வயதான இவர் கடந்த அக்டோபர் மாதம் தன்னை கற்பழித்துவிட்டதாக இப்போது அந்தப் பெண் புகார் தந்துள்ளார்.

ஒரு சட்ட அலுவலகத்தில் பணியாற்றும் 30 வயதான அந்தப் பெண், கெல்லியுடன் பலமுறை வெளியில் சுற்றியுள்ளார். இருவரும் செல்போனிலும் தொடர்பில் இருந்துள்ளனர். இந் நிலையில் அக்டோபர் 8ம் தேதி தனது அலுவலகத்துக்கு வந்த கெல்லி, தன்னை பலாத்காரம் செய்ததாக அந்தப் பெண் புகார் கூறியுள்ளார்.

இது குறித்து விசாரணை நடந்து வருகிறது.

அமெரிக்க ராணுவத்திலும் பணியாற்றியுள்ள கெல்லி பாக்ஸ் தொலைக்காட்சியின் வெள்ளை மாளிகை நிருபராகவும் இருந்துள்ளார். அந்தத் தொலைக்காட்சிக்காக இராக்கிலும் பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த கற்பழிப்பு குற்றச்சாட்டையடுத்து கெல்லியின் நிகழ்ச்சிகளை பாக்ஸ் தொலைக்காட்சி ரத்து செய்துள்ளது.

English summary
A New York woman has accused broadcast journalist Greg Kelly of sexually assaulting her last October. Kelly, 43, co-host of the morning TV show "Good Day New York" on the Fox affiliate WNYW-TV and the son of New York Police Commissioner Raymond W. Kelly, is cooperating with the investigation and denies any wrongdoing of any kind
Please Wait while comments are loading...
Your Fashion Voice

Videos

Advertisement
Content will resume after advertisement