நலமுடன் வீடு திரும்பினார் எஸ் ஜானகி!

உங்களது ரேட்டிங்:

சென்னை: குளியல் அறையில் வழுக்கி விழுந்து தலையில் காயத்துடன் திருப்பதி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த பாடகி எஸ்.ஜானகி சிகிச்சை முடிந்து நலமுடன் வீடு திரும்பினார்.

சமீபத்தில் திருப்பதி சென்ற பின்னணிப் பாடகி ஜானகி (73) குளியலறையில் வழுக்கி விழுந்ததால் காயமடைந்து சிம்ஸ் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டார்.

தலையில் காயம் ஏற்பட்டதால் அவருக்கு தையல் போடப்பட்டிருந்தது. இந்த நிலையில் உடல்நலம் தேறியதையடுத்து மருத்துவமனையில் இருந்து அவர் வீடு திரும்பினார்.

தற்போது அவருக்கு ஆபத்து ஒன்றுமில்லை என்றும், விரைவில் பழைய நிலைக்கு திரும்பிவிடுவார் என்றும் அவர் மகன் தெரிவித்தார்.

English summary
Popular Singer S Janaki returned home after the completion of treatment in Tiruppati Hospital. She is in normal now and taking rest at Chennai home.
Please Wait while comments are loading...
2016 Tamil Nadu Election

Videos