உணவு பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த அதிக வெளிநாட்டு முதலீடு - மத்திய அரசு

Posted by:
 
Share this on your social network:
   Facebook Twitter Google+    Comments Mail

Economy
டெல்லி: உணவுப் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த சில்லறை வணிகத்தில் அதிக வெளிநாட்டு முதலீடுகளை ஊக்குவிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக இந்திய பொருளாதார ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.

2011-2012-ம் ஆண்டுக்கான பொருளாதார ஆய்வறிக்கை இன்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. தலைமைப் பொருளாதார ஆலோசகர் கௌசிக் பாசு இதனை தயாரித்திருந்தார்.

இந்த அறிக்கையில் இடம்பெற்ற முக்கிய விஷயங்கள்:

-2012-2013-ல் பொருளாதார வளர்ச்சி 7.6 சதவீதமாக உயரும். அதன் பிறகு இது 8.6 சதவீதமாக இருக்கும்.

-இந்த காலாண்டில் நாட்டின் மொத்த உற்பத்தி முதல் முறையாக 7 சதவீதத்துக்கு கீழே வீழ்ச்சியடையும். மார்ச் இறுதியில் இது 6.1 சதவீதமாக இருக்கும்.

- 4-5 சதவீதமாக உள்ள தொழில்துறை வளர்ச்சி முன்னேற வாய்ப்புள்ளது.

- வேளாண்மை மற்றும் சேவைகள் துறையில் நல்ல வளர்ச்சி இருக்கும். வேளாண்மைத் துறையில் 2.4 சதவீத வளர்ச்சியும், சேவைத் துறையில் 9.4 சதவீத வளர்ச்சியும் இருக்கும். மொத்த உற்பத்தியில் இவற்றின் பங்களிப்பு 59 சதவீதமாக இருக்கும்.

- மொத்த விலைக் குறியீட்டெண்படி பணவீக்கம் அதிகமாகவே இருக்கும். ஆனால் ஆண்டிறுதியில் குறைய்த தொடங்கும்.

- உணவுப் பணவீக்கம் 20.2 சதவீதத்திலிருந்து 1.6 சதவீதமாகக் குறைந்துள்ளது. இது சரியான நிலைக்கு வருவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

-உணவுப் பணவீக்கத்தை நிலைப்படுத்த அதிக அளவு வெளிநாட்டு முதலீடுகளை சில்லறை வணிகத்தில் ஊக்குவிக்க வேண்டும்.

- உலகின் மிக வேகமாக வளரும் நாடுகளுள் இந்தியாவும் ஒன்று. இந்தியாவின் கடன் தரம் இப்போது 2.98 ஆக உயர்ந்துள்ளது.

- நிதிப் பற்றாக்குறையை சரியான அலகுகள் மூலம் சமாளித்து வருகிறோம். சேமிப்பு மற்றும் முதலீடு உருவாக்கம் அதிகரித்து வருகிறது.

- ஆண்டின் முதல் பாதியில் ஏற்றுமதி 40.5 சதவீதமும், இறக்குமதி 30.4 சதவீதமும் அதிகரித்துள்ளது. அந்நிய செலாவணி இருப்பு அதிகரித்துள்ளது.

- சமூக சேவைகளுக்கான மத்திய அரசின் செலவு 13.4 சதவீதத்திலிருந்து 18.5 சதவீதமாக உயர்ந்துள்ளது.

English summary
Favouring a phased opening of India’s multi-brand retail trade to FDI, the Economic Survey 2011-12 on Thursday said foreign investment could help in curbing food inflation in a significant way. “Allowing FDI in multi-brand retail is one of the major issues in this sector. This could begin in a phased manner in the metros, with the cap at a lower level coupled with incentivising the existing ‘mom and pop’ stores (kirana shops) to modernise and compete effectively with the retail shops, foreign or domestic,” the survey said.
Write a Comment

Videos