For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஆ.ராசா மீது புதிய குற்றச்சாட்டுடன் சு.சாமி வழக்கு: 26-ந் தேதிக்கு ஒத்திவைப்பு

By Mathi
Google Oneindia Tamil News

டெல்லி: நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஊழல் வழக்கில் முக்கிய குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ள முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசாவுக்கு எதிராக ஜனதா கட்சி தலைவர் சுப்பிரமணிய சாமி டெல்லி சி.பி.ஐ. தனிநீதிமன்றத்தில் புதிய குற்றச்சாட்டுக்களை சுமத்தி ஒரு வழக்கு தாக்கல் செய்துள்ளார்.

இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது சுப்பிரமணியசாமி சென்னையில் இருப்பதாகக்கூறி, வழக்கின் விசாரணையை மே மாதம் மத்திக்கு ஒத்திவைக்குமாறு அவரது வழக்கறிஞர் கூம்பர் மனுத்தாக்கல் செய்தார்.

இதை நீதிபதி ஓ.பி.சைனி, ஏற்றுக்கொண்டு, வழக்கு விசாரணையை மே மாதம் 26-ந் தேதிக்கு ஒத்தி வைத்தார்.

ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஊழல் வழக்கில் உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்தையும் சேர்த்து விசாரிக்க வேண்டும் என்று சுப்பிரமணிய சாமி தாக்கல் செய்த மனுவை, சி.பி.ஐ. தனிநீதிமன்றம் தள்ளுபடி செய்து விட்டதும், அதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் அவர் மேல் முறையீடு செய்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.

English summary
A Delhi court on Saturday deferred till May 26 the hearing on a plea by Janata Party chief Subramanian Swamy who had levelled some fresh allegations against former telecom minister A Raja, the key accused in the 2G spectrum allocation case.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X