For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சீன் படம் பார்த்த எம்.எல்.ஏக்களை டிஸ்மிஸ் செய்யக் கோரி குஜராத் சட்டப்பேரவையில் கடும் அமளி!

By Mathi
Google Oneindia Tamil News

Narendra Modi
காந்திநகர்: குஜராத் சட்டப்பேரவையில் ஆபாசப் படம் பார்த்ததாக குற்றம்சாடப்பட்டுள்ள 2 பாரதிய ஜனதா கட்சி எம்.எல்.ஏ.க்களை நீக்கம் செய்ய வேண்டும் என்று எதிர்க்கட்சியான காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏக்கள் வலியுறுத்தியதால் பேரவை நடவடிக்கைகள் முடங்கின.

குஜராத் சட்டப்பேரவை இன்று காலை தொடங்கியதும் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள், 2 பாஜக எம்.எல்.ஏக்களை நீக்கம் செய்யுமாறு முழக்கமிட்டனர். பின்னர் சபாநாயகர் இருக்கையை அருகே நின்று முழக்கங்களை எழுப்பினர். அனைவரையும் இருக்கையில் அமருமாறு சபாநாயகர் கேட்டுக் கொண்ட போதும் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் தொடர்ந்து முழக்கங்களை எழுப்பிக் கொண்டே இருந்தனர். இதையடுத்து அவை

நடவடிக்கைகளை ஒரு மணிநேரம் ஒத்திவைப்பதாக சபாநாயகர் கன்பத் வசவா அறிவித்தார்.

குஜராத் சட்டப்பேரவையில் நேற்றும் இவ்விவகாரம் எதிரொலித்தது. இதனால் அவை நடவடிக்கைகள் 4 முறை ஒத்திவைக்கப்பட்டது. அவை நடவடிக்கைகளுக்கு இடையூறு செய்ததாக காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் ஒரு நாள் முழுவதும் சஸ்பெண்ட் செய்யப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டது.

பாரதிய ஜனதா எம்.எல்.ஏக்கள் செளத்ரி, சேரா பர்வாத் ஆகியோர் பேரவையில் தங்களது செல்போனில் ஆபாச படம் பார்த்தனர் என்பது புகார்.

English summary
The Gujarat Assembly was today adjourned for an hour as Congress MLAs stalled the proceedings for the third consecutive day, seeking dismissal of two BJP MLAs accused of watching porn in the House.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X