For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

உலகின் மிகப் பெரிய அணுமின் உற்பத்தி மையமாக கூடங்குளம் உருவாகும்: அப்துல்கலாம்

Google Oneindia Tamil News

Abdul Kalam
மதுரை : கூடங்குளம் அடுத்த 10 ஆண்டுகளில் மிகப் பெரிய அணு மின் உற்பத்தி மையமாக உலகில் அடையாளம் காட்டப்படும் என்று முன்னாள் குடியரசுத் தலைவரும் அணு விஞ்ஞானியுமான டாக்டர் அப்துல் கலாம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அப்துல்கலாம் வெளியிட்டுள்ள அறிக்கை:

மின் தேவையில் இந்தியா தன்னிறைவு அடைய, அணு மின் உற்பத்தி தேவை என்று உணர, கூடங்குளம் சம்பவம் ஒரு வாய்ப்பாக அமைந்துள்ளது.

அணு மின் உற்பத்தி செய்யப்படும் முறை, அணு மின் நிலையங்களின் நம்பகத்தன்மை, அவற்றின் பாதுகாப்பு மட்டுமின்றி, 2030-க்குள் மின் உற்பத்தியில் தன்னிறைவடைய அணு மின் சக்தி எவ்வளவு அவசியம் என்பதையும் உணர்ந்து கொள்ள இந்த அனுபவம் உதவியுள்ளது.

இது தொடர்பாக எழுந்த விவாதங்கள், பொதுமக்களின் மனதைத் தூண்டிவிட்டு, அணு மின் சக்தியின் மூன்று கட்டச் செயல்பாடுகளையும், நிலையான எதிர்காலத்துக்கு அது தேவை என்பதையும் புரிந்து கொள்ள வைத்துள்ளது.

அடுத்த பத்தாண்டுகளில், கூடங்குளத்தை மிகப் பெரிய அணு மின் உற்பத்தி மையமாக உலகுக்கு அடையாளம் காட்ட இந்த அணு மின் திட்டம் பயன்படும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

English summary
Abdul Kalam who is Former President of India said that in his statement, Kudankulam Nuclear Power Plant will be emerged as one of the best nuclear plant in the world within next 10 years.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X