For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ராணுவ தளபதி தெரிவித்த லஞ்சப் புகார் சதி விவகாரத்தால் நாடாளுமன்றத்தில் கடும் அமளி

By Mathi
Google Oneindia Tamil News

டெல்லி: ராணுவ தலைமை தளபதி வி.கே.சிங் தம்மை லஞ்சப் புகாரில் சிக்க வைக்க சதி நடந்ததாக தெரிவித்திருந்த விவகாரம் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் கடும் அமளியை ஏற்படுத்தியது.

தம்மை லஞ்சப் புகாரில் சிக்க வைக்க ரூ14 கோடியாக லஞ்சம் கொடுக்க சிலர் முன்வந்தனர் என்று நாளிதழ் ஒன்றுக்கான பேட்டியில் வி.கே.சிங் தெரிவித்திருந்தார்.

இன்று காலை அவை கூடியதும் இந்த விவகாரத்தை எதிர்க்கட்சி உறுப்பினர்கல் எழுப்பினர். அரசு தரப்பில் உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் அவர்கள் முழக்கமிட்டனர்.

ஆனால் அவை நடவடிக்கைகளை தொடர்ந்து நடத்த முற்பட்டதால் அமளி ஏற்பட்டது. இதையடுத்து இரு அவைகளின் நடவடிக்கைகளும் பிற்பகல் வரை ஒத்திவைக்கப்பட்டன.

English summary
Opposition members created an uproar in both Houses of Parliament on Monday over over Army Chief General VK Singh's claim that he was offered bribe.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X