For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மத்திய அரசின் திருமண சட்ட திருத்த மசோதாவில் புதிய விதி: ஆண்கள் கடும் எதிர்ப்பு

By Mathi
Google Oneindia Tamil News

Divorce Law
சென்னை: மத்திய அரசின் திருமண சட்ட திருத்த மசோதாவில் புதிய விதிகள் கொண்டுவரப்பட்டுள்ளதற்கு ஆண்கள் பாதுகாப்பு சங்கம் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளது. இந்த புதிய விதிகள் பெண்களுக்கு மட்டுமே சாதகமானது என்பது ஆண்கள் சங்கத்தின் கருத்து.

இது தொடர்பாக தமிழ்நாடு ஆண்கள் பாதுகாப்பு சங்கத்தின் தலைவர் டி.அருள் துமிலன், பொதுச் செயலாளர் எஸ்.மதுசூதனன் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

கடந்த 2010-ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட திருமணச் சட்டத் திருத்த மசோதாவில், தற்போது நடைபெறும் நாடாளுமன்ற கூட்டத் தொடரில் கொண்டு வந்துள்ள திருத்தங்கள், ஆண்களை பெண்கள் அடிமைப்படுத்தும் விதத்தில் உள்ளது. அதோடு மனைவி விவாகரத்து கேட்டால், அதை எதிர்க்க கணவனுக்கு உரிமை இல்லாமல் போகிறது.

890 கள்ளக்காதல் கொலைகள்

தமிழகத்தில் 2008-10-ம் ஆண்டில் மட்டும் 890 கள்ளக்காதல் கொலைகள் நடந்தேறியுள்ளன. இனி சேர்ந்து வாழ முடியாது என்ற நிலையில் உடனே விவாகரத்து வழங்கும் புதிய விதி, இந்தியாவின் குடும்ப கலாசாரத்துக்கு முரணானதாகும். எனவே இதுபோன்ற சட்ட திருத்தங்களை உடனே கைவிட வேண்டும் என்று மத்திய அரசை கேட்டுக்கொள்கிறோம். இல்லாவிட்டால், மாநிலம் தழுவிய போராட்டத்தை எங்கள் சங்கம் நடத்தும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

English summary
The Union government must be commended for the changes it has proposed to the Hindu Marriage Act of 1955. The proposed Hindu Marriage (Amendment) Bill, 2010 addresses the anomalies in the existing law that had made the entire divorce process antagonistic to the interests of women. The most progressive aspect of the amendment is that in the eventuality of a divorce, women will be entitled to a share in the property or assets acquired by the couple after marriage.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X