For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஐ.நா. எதிர்ப்பு : ஆயுதப் படை சிறப்பு அதிகார சட்டத்தில் திருத்தம் வருகிறது

By Mathi
Google Oneindia Tamil News

டெல்லி: ஐக்கிய நாடுகள் சபையின் எதிர்ப்பைத் தொடர்ந்து ஆயுதப் படை சிறப்பு அதிகார சட்டத்தின் சில ஷரத்துகளில் மாற்றம் கொண்டுவர மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் கூறியுள்ளார்.

டெல்லியில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய சிதம்பரம் இதைத் தெரிவித்துள்ளார்.

"ஆயுதப் படை சிறப்பு அதிகார சட்டத்தில் 3 பிரிவுகளில் மாற்றம் கொண்டுவருவதற்கான திருத்தம் பாதுகாப்பு விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு முன்பாக வைக்கப்பட்டுள்ளது என்றார் அவர்.

ஹெய்ன்ஸ்

முன்னதாக காஷ்மீர் மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரணை நடத்திய ஐ.நா. பிரதிநிதி ஹெய்ன்ஸ் இச்சட்டத்தை மிகக் கடுமையாக விமர்சனம் செய்திருந்தார்.

"இந்தியா போன்ற ஜனநாயக நாடுகளில், இதுபோன்ற சட்டங்களுக்கு இடமில்லை. எனவே, அந்தச் சட்டத்தை ரத்து செய்ய வேண்டும். என்னுடைய காஷ்மீர் பயணத்தின்போது, ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டம் கொடுமையானது, வெறுக்கத்தக்கது என, பலரும் வர்ணித்தனர். இப்படிப்பட்ட ஒரு கடுமையான சட்டம் அமலில் இருப்பது சர்வதேச சட்ட விதிகளுக்கு முரணானது" என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

இரோம் சர்மிளா

காஷ்மீரில் ஆயுதப் படையினருக்கான சிறப்பு அதிகார சட்டத்தை ரத்து செய்வதில் மாநில முதல்வர் உமர் அப்துல்லா தீவிரமாக உள்ளார்.

கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக வடகிழக்கு மாநிலங்களில் கொடூரத்தை கட்டவிழ்த்துவிடும் இந்த சட்டத்தை எதிர்த்து மணிப்பூர் மனித உரிமைப் போராளி இரோம் சர்மிளா தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் இந்த விவகாரம் சர்வதேச பிரச்சனையாக உருவெடுத்திருக்கிறது.

இந்த ஆயுதப் படை சிறப்புச் சட்டம் மூலம் இந்திய பாதுகாப்புப் படையினர், யாரை வேண்டுமானாலும் கைது செய்யலாம். எத்தனை காலத்திற்கு வேண்டுமானாலும் விசாரணை நடத்தலாம். கோர்ட்டுக்கே கொண்டு செல்லாமல் தங்களது கஸ்டடியில் வைத்திருக்கலாம் என்பது போன்ற கடுமையான வசதிகளை இந்த சட்டம் ராணுவத்திற்குத் தருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
The home ministry has sought amendments in the controversial Armed Forced Special Powers Act (AFSPA) and the proposal is pending before the Cabinet Committee on Security with home minister P Chidambaram saying there should be three amendments to the insurgency law.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X