For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கே.என். ராமஜெயம் படுகொலை- வெளி மாநில கூலிப்படைக்கு தொடர்பா?

Google Oneindia Tamil News

Ramajeyam
- கே.என்.வடிவேல்

கரூர்: முன்னாள் அமைச்சரும், திருச்சி மாவட்ட தி.மு.க. செயலாளருமான கே.என்.நேருவின் தம்பி ராமஜெயம் கடத்தி கொலை செய்யப்பட்ட வழக்கில் மும்பை கும்பலுக்கு தொடர்பு உள்ளதாக பரபரப்பாக பேசப்படுகிறது.

தொழில் அதிபரான ராமஜெயம் தில்லைநகர் 10வது கிராசில் வசித்து வந்தார். தினமும் அதிகாலையில் வாக்கிங் செல்லும் பழக்கத்தை கொண்டவர் ராமஜெயம். அதே போல காலை வழக்கம் போல் தனது மனைவி லதாவிடம் கூறிவிட்டு ராமஜெயம் வாக்கிங் சென்றதாக கூறப்படுகின்றது. வெகு நேரம் ஆகியும் அவர் விடுதிரும்பவில்லை என்றும் கூறப்படுகின்றது.

இதனால், அவரது மனைவி லதா காலை 8.30 மணிக்கு கணவரின் செல்போனுக்கு தொடர்பு கொண்ட போதும், அவரது பதில் கிடைக்கவில்லை. மேலும், செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது.

இதனையடுத்து, இந்த தகவலை முன்னாள் அமைச்சர் கே.என். நேருவின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளார். அவரது உத்தரவின் பேரில் திமுக முக்கிய நிர்வாகிகள் ராமஜெயத்தை வலை வீசி தேடியுள்ளனர். ஆனால் கிடைக்கவில்லை.

இதனால், ராமஜெயத்தின் மனைவி லதா தில்லைநகர் காவல் நிலையத்தில் இது குறித்து புகார் அளித்தார்.

இந்த நிலையில் தான், ஸ்ரீரங்கம் அருகே திருவளர்ச்சோலை பகுதியில் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் ராமஜெயம் பிணமாக கிடப்பதை அறிந்த போலீசார், அது ராமஜெயம் என்பதை உறுதிப்படுத்திக் கொண்டு, பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

தில்லை நகரில் உள்ள ராமஜெயத்தின் வீட்டில் இறுதி சடங்குகள் நடைபெற்றது. பின்பு ஒய்யா மாரி இடுகாட்டில் அவரது உடல் தகனம் செய்யப்பட்டது.

தற்போது இந்தக் கொலைச் சம்பவம் குறித்து சிபிஐ விசாரணை கோரியுள்ளது திமுக. இதுகுறித்து திமுக தரப்பைச் சேர்ந்த சில முக்கிய நிர்வாகிகளிடம் கேட்டபோது, தமிழக போலீஸ் விசாரணை முறையாக நடக்காது என்பதால் தான் திமுக சிபிஐ விசாரணை கோருகின்றது. இந்த ஒரு கொலையில் ஒரு சமயம் வெளி மாநில தொடர்புகள் இருந்தால், அங்கு சென்று கொலையளிகளை தமிழக போலீசார் பிடிப்பது சிரமம்.

ஆனால் சிபிஐ போலீசார் என்றால் இந்தியா-வில் குற்றவாளிகள் எங்கு இருந்தாலும் அவர்களை விரைவில் மடக்கி பிடித்து விடுவார்கள். மேலும், மத்திய அமைச்சரவையில் திமுக அங்கம் வகிப்பதால் மத்திய அரசுக்கு நெருக்கடி கொடுத்து விரைவில் குற்றவாளிகளை கைது செய்துவிடும் என்பாதல் தான் சிபிஐ விசாரணை கோருகின்றனர். அது மட்டும் அல்ல குற்றவாளிகளின் இலக்கு ராமஜெயம் மட்டுமா அல்லது அதையும் தாண்டி செல்கின்றதா என பார்க்க வேண்டும் என ஆதங்கத்தோடு கூறினர்.

இது குறித்து சில உயர் போலீஸ் அதிகாரிகளிடம் பேசிய போது,

திமுக முன்னாள் அமைச்சர் கே.என். நேருவு-க்கு அரசியல், தொழில் என எல்லாவற்றிலும் பின்புலமாக இருந்து இயக்கியவர் அவரது தம்பி ராமஜெயம்.

ராமஜெயத்தை திமுக-வினர் எம்.டி. என்றே அழைப்பார்கள். அந்த அளவு பல தொழில்களில் கொடி கட்டி பறந்தார். தொழில் வெற்றி பெற வேண்டும் என்பதற்ககாவும், அதிக லாபம் கிடைக்க வேண்டும் என்பதற்காகவும் பலரது வெறுப்பையும் சம்பாதித்தார்.

அத்துடன் திருச்சியில் உள்ள முக்கிய சாலைகள் மற்றும் பஸ் நிலையம் அருகில் உள்ள பிரபல ஹோட்டல்கள், பெரிய பங்களா-க்கள் என பலவற்றை வளைத்துப் போட்டனர். இதனால் பலரது எதிர்ப்புகளை சம்பாதித்தனர்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு ராமஜெயத்தை கொலை செய்ய முயற்சி செய்வதாக கூறி திருச்சியைச் சேர்ந்த பிரபல ரவுடி குணாவை போலீசார் கைது செய்தனர்.

மேலும்,தேமுதிக பிரமுகர் செந்தூரேஸ்வன் மீதும் சந்தக பார்வையை செலுத்தினர். ஆனால் இதில் அவருக்கு தெடார்பு இல்லை என்பதால் அவரை விட்டுவிட்டனர்.

இந்த நிலையில், ராமஜெயத்தை கொலை செய்ய எட்டரை கோப்பு கும்பல் என்ற பெயரிலான ஒரு கும்பல் முயன்றதாக ரகசிய தகவல் வெளியானது.

அமைச்சர் கே.என். நேரு கும்பத்திற்கு சொந்தமான நவீன அரிசி அலை லால்குடி அருகே பூவலூரில் உள்ளது. இந்த தொழிற்சாலையில் வேலை செய்த ஒரு முக்கிய சமூகத்தைச் சேர்ந்த ஒருவரை விசாரணை என்ற பெயரில் ராமஜெயம் அழைத்து துன்புறுத்தியதாக கூறப்படுகின்றது.

அப்போது, அந்த நபர் இறந்து போனதாகவும், அதற்கு ராமஜெயம் தான் காரணம் என முடிவு செய்த அந்த சமூக நிர்வாகிகள் சிலர் ராமஜெயத்திடம் நீதி கேட்டுள்ளனர். ஆனால் ராமஜெயம் தரப்பிலிருந்து எதுவும் கிடைக்கவில்லையாம். இதனால் இரு தரப்புக்கும் இடையே கடும் முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் ராமஜெயத்தை குறிவைத்து அந்த எட்டரைக் கோப்புக் கும்பல் பயங்கர ஆயதங்களுடன் அவரை பின்தொடர்ந்து வருவதாக கூறப்பட்டது. இதன் தொடர்ச்சியாகத்தான் ரவுடி குணாவை போலீசார் கைது செய்ததாகவும் அப்போது பரபரப்பாக செய்திகள் அடிபட்டன.

மேலும், ஒரு முறை ராமஜெயம் பெங்களூர் சென்று விட்டு திரும்பும் போது தர்மபுரி வரும் போது ஒரு கும்பல் அவரை பின் தொடர்ந்து வந்து கொலை முயற்சி செய்ததாகவும், அப்போது அவர் தனது துபாப்க்கியால் சுட்டுவிட்டு மாற்று வழியில் தப்பிவிட்டார் என்றும் கூறுகின்றனர்.

தற்போது நடந்த கொலைக்கும், இந்த கும்பல்களுக்கும் தொடர்பு இருக்கிறதா என்பது தெரியவில்லை.

கடந்த 29ம் தேதி அதிகாலை மர்ம நபர்களால் படுகொலை செய்யப்பட்டார். கொலையை துப்பறியும் வகையில், ஐந்து தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

மனைவியிடம் தீவிர விசாரணை

இதற்கிடையே, ராமஜெயத்தின் வீட்டுக்கு, திருச்சி மாநகர துணை கமிஷனர் ஜெயபாண்டியன் தலைமையிலான தனிப்படையினர் சென்று, அவரது மனைவி லதாவிடம், இரவு 8 மணியில் இருந்து நள்ளிரவு 1 மணி வரை விசாரணை நடத்தினர்.

ராமஜெயத்தின் குடும்ப உறுப்பினர்கள், வேலைக்காரர்கள், அப்பகுதியில் உள்ள இரவு வாட்ச்மேன்களிடம் தனிப்படையினர் விசாரணை நடத்தினர். விரைவில் முன்னாள் அமைச்சர் நேருவிடமும் தனிப்படை போலீசார் விசாரணை நடத்த உள்ளனர்.

இதற்கிடையே ராமஜெயம் கொலை தொடர்பாக பல சந்தேகங்கள் எழுப்பப்பட்டு வருகின்றன.

1. பிரபல தொழில் அதிபரான ராமஜெயத்திற்கு எதிரிகள் அதிகம் என்பதால் அவர் வெளியே செல்லும் போது, கைத்துப்பாக்கி எடுத்துச் செல்லாதாது ஏன்.

2. காலையில் கொலை செய்து இருந்தால், பாடி உப்பிப் போய் இருக்காது என போஸ்ட்மார்டம் செல்வதால் அவர் இரவே கொலை செய்யப்பட்டு இருக்கலாம்.
அப்படியென்றால் அன்று இரவு ராமஜெயம் எங்கே இருந்தார்.

4. ராமஜெயத்தின் உடலில் வழக்கமாக வாக்கிங் செல்வோர் அணியும் டிராக் சூட் இல்லை. சாதாரண லுங்கியில்தான் இருந்துள்ளார்.

5. ராமஜெயம் வீட்டில் வாட்ச்மேன் இருக்கும் போது அவருக்கு தெரியாமல் ராமஜெயம் எப்படி வெளியே செல்லமுடியும்

6. காலை 6 மணிக்கு மேல் வாக்கிங் போனபோது கடத்தப்பட்டிருந்தால் சாலையில் ஒருவர் கூடவா அதைப் பார்த்திருக்க மாட்டார்கள்.

7. காலையில் வாக்கிங் போனபோது கடத்தப்பட்டிருந்தால் ராமஜெயத்தின் செல்போனிலிருந்து அதிகாலை 3 மணிக்கு எப்படி மர்ம மனிதர்கள் பேசியிருக்க முடியும்.

8. அதிகாலை நேரத்தில் கே.என்.நேருவின் தொலைபேசி எண்ணைக் கேட்டு எதற்கு அந்தக் கும்பல் தொடர்ந்து போன் பண்ணி முயற்சித்தது.

9. ஒரு கொலை குற்றம் நடந்த பிற்கு கொலையாளி எப்போதும் தன்னை மிகவும் ரகசியமாக வைத்திருக்கவே விரும்புவான். அப்படி இருக்க கே.என். நேருவுக்கு போன் செய்து கொலை மிரட்டல் விடுக்க வேண்டிய அவசியம் என்ன என்பது உள்பட பல கேள்விகள் பல்வேறு தரப்புகளிலிருந்து எழுந்து நிற்கின்றன.

இப்படிப்பட்ட கேள்விக்களுக்கெல்லாம் விரைவில் விடை கிடைக்கலாம் என்று நம்புவோம்.

English summary
Trichy police are investigation in various angles in Ramajayam murder case. The hands of other state gang is also suspected.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X