இந்தியா-வியட்நாம் இடையேயான வர்த்தகத்தை 700 கோடி டாலராக அதிகரிக்கும்

Posted by:
 
Share this on your social network:
   Facebook Twitter Google+ Comments Mail

Indo-Vietnam trade to reach 7 billion dollars by 2015
டெல்லி: இந்தியா மற்றும் வியட்நாம் இடையேயான இருதரப்பு வர்த்தகமானது அடுத்த 3 ஆண்டுகளில் 700 கோடி டாலரை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பத்து உறுப்பினர்களை கொண்ட தென்கிழக்கு ஆசிய நாடுகளின் கூட்டமைப்புடன் பொருட்கள் மீதான தாராள வர்த்தக ஒப்பந்தத்தை 2010-ஆம் ஆண்டு இந்தியா உருவாக்கியது. .

மேலும் சேவைகள் மற்றும் முதலீடுகளுக்கான தாராள ஒப்பந்தத்தை ஏற்படுத்தும் முயற்சியையும் தீவிரப்படுத்தி வருகிறது.

தற்போது வியட்நாமுக்கு மருந்து பொருட்கள், பருத்தி, மின் இயந்திரங்கள் ஆகியவற்றை ஏற்றுமதி செய்து வரும் இந்தியா அங்கிருந்து இரும்பு, எஃகு, மோட்டார் வாகனங்கள் மற்றும் எரிபொருட்களை இறக்குமதி செய்து வருகிறது.

79 கோடி டாலர் முதலீட்டில் 78 இந்த்யத் திட்டங்கள் வியட்நாமில் பல்வேறு நிலைகளில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இதில் வியட்நாமுக்குச் சொந்தமான தென்சீனக் கடற்பரப்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் எண்ணெய் அகழாய்வுப் பணிகளும் உள்ளடக்கம்.

English summary
The two-way trade between India and Vietnam is likely to reach seven billion dollars by 2015 from four billion dollars last year.
Please Wait while comments are loading...
Your Fashion Voice

Videos

Advertisement
Content will resume after advertisement