For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தெற்கு ரயில்வேயின் வருமானம் ரூ.5,568 கோடி: பொது மேலாளர்

By Siva
Google Oneindia Tamil News

Train
சென்னை: கடந்த 2011-2012 நிதியாண்டில் பயணிகள் மற்றும் சரக்கு போக்குவரத்தின் மூலம் தெற்கு ரயில்வேக்கு ரூ.5,568 கோடி வருவாய் கிடைத்துள்ளதாக தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஸ்ரீ தீபக் கிரிஷன் தெரிவித்துள்ளார்.

சென்னை பிராட்வேயில் உள்ள ராஜா அண்ணாமலை மன்றத்தில் 57வது ரயில்வே வார விழா நடந்தது. அந்த விழாவில் தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஸ்ரீ தீபக் கிரிஷன் கலந்து கொண்டார்.

அப்போது பேசிய அவர் கூறியதாவது,

கடந்த 2011-2012 நிதியாண்டில் பயணிகள் மற்றும் சரக்கு போக்குவரத்தின் மூலம் தெற்கு ரயில்வேக்கு ரூ.5,568 கோடி வருவாய் கிடைத்துள்ளது. இதில் பயணிகள் போக்குவரத்து மூலம் ரூ.2,560 கோடி கிடைத்துள்ளது. இது கடந்த ஆண்டை விட ரூ.242 கோடி அதிகம். மேலும் சரக்கு போக்குவரத்து மூலம் ரூ.2,221 கோடி வருவாய் கிடைத்துள்ளது. இது கடந்த ஆண்டை விட ரூ.268 கோடி அதிகம் ஆகும்.

சென்னை மெட்ரோ ரயில் பயணிகளுக்காக ரயில்வே இடத்தை கொடுத்ததன் மூலம் ரூ.512 கோடி வருவாய் கிடைத்துள்ளது என்றார்.

English summary
Shri Deepak Krishan, General Manager, Southern Railway has told that Southern Railway achieved gross earnings of Rs. 5,568 crores during the fiscal 2011-12.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X