For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

டெல்லியில் அமெரிக்கா- இந்தியா இடையே அடுத்தவாரம் பேச்சுவார்த்தை

By Mathi
Google Oneindia Tamil News

டெல்லி: இந்தியா மற்றும் அமெரிக்கா இடையே ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு அரசியல் மற்றும் ராணுவ ரீதியிலான பேச்சுவார்த்தைகள் அடுத்த வாரம் டெல்லியில் நடைபெற உள்ளது. .

அமெரிக்க வெளிவிவகார இணைச் செயலாளர் ஆண்ட்ரூ ஸாபிரோ இப்பேச்சுவார்த்தையில் கலந்து கொள்கிறார்.

அண்மைக்காலமாக இந்தியா மற்றும் அமெரிக்கா இடையே பாதுகாப்பு தொடர்பாக நெருக்கமான உறவு பேணப்படுகிறது. மேலும் சோமாலிய கடற்பரப்பில் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுடன் இணைந்து கடற்கொள்ளையர்களின் தாக்குதலை தடுக்கும் நடவடிக்கையில் இந்தியாவும் ஈடுபட்டு வருகிறது.

அமெரிக்காவும் ஆசிய-பசிபிக் நோக்கியே தமது அனைத்து நகர்வுகளையும் மேற்கொண்டு வருகிறது.

தெற்காசியாவில் வலுவாக காலூன்றி நிற்க முனைப்பு காட்டும் அமெரிக்காவுக்கு இந்தியாவுடன் அரசியல் மற்றும் ராணுவ ரீதியான உறவை வலுப்படுத்த வேண்டிய தேவை உள்ள நிலையில் பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது.

மேலும் இந்தியாவை நேட்டோ நாடுகள் அமைப்பில் சேர்ப்பதற்கான நெருக்கடிகளையும் அமெரிக்கா கொடுத்துவருவதும் குறிப்பிடத்தக்கது.

English summary
After a gap of nearly six years, the US and India would hold their first political-military dialogue in New Delhi next week during which the two countries are expected to discuss a wide range of bilateral issues.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X