For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அணு மின் நிலையம் அமைக்க இந்தியாவுக்கு அனைத்து உரிமையும் உள்ளது: இலங்கை

By Siva
Google Oneindia Tamil News

கொழும்பு: கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு தாங்கள் எதிர்ப்பு தெரிவிக்கவேயில்லை என்றும், மின் தேவையை சமாளிக்க அணு சக்தியை பயன்படுத்த இந்தியாவுக்கு அனைத்து உரிமைகளும் உள்ளது என்றும் இலங்கை தெரிவித்துள்ளது.

ஐ.நா. மனித உரிமைக் குழு கூட்டத்தில் அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானத்தை ஆதரித்து இந்தியா வாக்களித்ததால் தமிழகத்தில் உள்ள கூடங்குளம் அணு மின் நிலையத்திற்கு இலங்கை எதிரிப்பு தெரிவித்துள்ளது என்று வெளியான செய்திகளில் உண்மை இல்லை என்று இலங்கை அணு சக்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

இலங்கை அமைச்சர் சம்பிகா ரணவாகா கூடங்குளம் விவகாரம் குறித்து வரும் செப்டம்பரில் நடக்கும் சர்வதேச அணு சக்தி கழக கூட்டத்தில் புகார் தெரிவிக்கப்போவதாக அறிவித்ததாக வெளியான தகவல் பொய்யானது என்று அணு சக்தி அதிகார சபை தலைவர் ஆர். எல். விஜயவர்த்தனா தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் மின் தேவையை சமாளிக்க அந்நாடு அணு சக்தியை பயன்படுத்துகிறது என்பது இலங்கைக்கு நன்கு புரிகிறது. மேலும் மின் தேவைக்காக அணு சக்தியை பயன்படுத்த இந்தியாவுக்கு அனைத்து உரிமைகளும் உள்ளது. இந்திய மண்ணில் உள்ள எந்த அணு மின் நிலையத்திற்கும் இலங்கை எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. அது அவர்களுடைய உரிமை என்று இலங்கை தெரிவித்துள்ளது.

கூடங்குளம் அணு மின் நிலையத்தை இலங்கை எதிர்க்கிறது என்பது ஆதாரமற்ற ஒன்றாகும் என்று விஜயவர்த்தனா தெரிவித்துள்ளார். இலங்கைக்கு அருகில் இந்தியாவின் எந்த அணு மின் நிலையமும் இல்லை. அணு மின் நிலையங்கள் குறித்த விவரத்தை தெரிவிக்குமாறும், ஒரு வேளை ஏதாவது விபத்து ஏற்பட்டால் உதவும் வகையில் இந்தியாவுடன் ஒப்பந்தம் செய்யலாம் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

English summary
Sri Lanka said it had not objected to the Kudankulam nuclear power project in Tamil Nadu and underlined that India has every right to use nuclear technology in meeting the requirements of electrical energy.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X