For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கடனுக்கான வட்டியை மாநில அரசு செலுத்த அவகாசம் தேவை: மத்திய அரசுக்கு மமதா கெடு

By Mathi
Google Oneindia Tamil News

Mamata Banerjee
கொல்கத்தா: மத்திய அரசுக்கான மேற்குவங்க முதல்வர் மமதா பானர்ஜியின் அடுத்த கட்ட குடைச்சல் பாய்ந்துள்ளது. கடனுக்கான வட்டி தொகையை மேற்குவங்க அரசு திருப்பி செலுத்த கால அவகாசம் அளிக்க வேண்டும் என்ற தமது கோரிக்கையை மத்திய அரசு 15 நாளுக்குள் ஏற்க வேண்டும் என்று மமதா பானர்ஜி கெடு விதித்துள்ளார்.

சில்லரை வர்த்தகத்தில் அன்னிய நேரடி முதலீட்டை அனுமதிப்பது, தேசிய தீவிரவாத தடுப்பு மையம் ஆகிய விவகாரங்களில் மத்திய அரசுக்கு கடும் எதிர்ப்பைத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் மேற்கு வங்காள அரசு செலுத்த வேண்டிய கடனுக்கான வட்டி பாக்கி தொடர்பாக மத்திய அரசுக்கு இப்போது அவர் கெடு' ஒன்றை விதித்து உள்ளார்.

இது தொடர்பாக மமதா பானர்ஜி கூறியுள்ளதாவது:

மேற்கு வங்காளத்தில் முன்பு ஆட்சியில் இருந்த இடதுசாரி அரசு ரூ.2 லட்சம் கோடி கடன் பாக்கியை வைத்துவிட்டு சென்று உள்ளது. இதற்கான வட்டி சுமையும் அதிகரித்து விட்டது. இந்த வட்டி தொகையை வசூலிப்பதை 3 ஆண்டுகளுக்கு நிறுத்தி வைக்க வேண்டும் என்று பிரதமர் மன்மோகன் சிங்கிடமும், நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜியிடமும் ஏற்கனவே பல முறை கோரிக்கை விடுத்து உள்ளேன். ஆனால் இன்னும் பதில் வரவில்லை. வட்டி தொகையை திருப்பி செலுத்த முடியாத நிலையில் அரசு உள்ளது. எனவே மத்திய அரசு இன்னும் 15 நாட்களுக்குள் எனது கோரிக்கையை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்றார் அவர்.

கோரிக்கையை ஏற்காவிட்டால் என்ன செய்யப்போகிறீர்கள் என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு அவர் பதிலளிக்க மறுத்துவிட்டார்.

English summary
West Bengal chief minister Mamata Banerjee has put the Centre on notice again, this time on fiscal sops for her debt-burdened state. The CM on Saturday gave the UPA government 15 days to announce a moratorium on repayment of loans her government has inherited from the Left regime.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X