For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தேனீரை இந்தியாவின் தேசிய பானமாக அறிவிக்க ஆலோசனை: எம்.எஸ்.அலுவாலியா

By Mathi
Google Oneindia Tamil News

Tea could be India’s national drink
ஜோர்காட்: இந்தியாவின் தேசிய பானமாக தேனீரை அறிவிக்க ஆலோசனை நடந்து வருவதாக திட்டக் குழுத் துணைத் தலைவர் மாண்டேசிங் அலுவாலியா தெரிவித்துள்ளார்.

அசாம் மாநிலம் ஜோர்காட்டில் நடைபெற்ற அசாம் தேயிலை பயிரிடுவோர் சங்கத்தின் 75-ம் ஆண்டு விழாவில் கலந்து கொண்டு அலுவவாலியா பேசுகையில், அசாமில் முதன் முதலில் தேயிலை பயிரிட்டவர் மோனிராம் தேவன். அவர் நாட்டின் விடுதலைக்காகப் போராடியவர். அவரால் இன்று தேயிலை பயிரிடும் தொழில் அபரிதமாக வளர்ந்திருக்கிறது. நாட்டின் தேசிய பானமாக தேயிலையை அறிவிப்பது தொடர்பாக வர்த்தகத்
துறை அமைச்சர் ஆனந்த் சர்மா போன்றோருடன் ஆலோசனை நடத்தி வருகிறோம் என்றார் அவர்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய அசாம் முதல்வர் தருண் கோகய், மாநிலத்தின் கிராமப்புற வருவாய் தரக்கூடிய முதல்நிலை தொழிலாக தேனீர் தான் இருந்து வருகிறது என்றார்.

தேனீரை தேசிய பானமாக்க அறிவிக்க வேண்டும் என்று அசாம் மாநிலத்துக்கு வருகை தந்திருந்த பிரதமர் மன்மோகன்சிங்கிடம் முதல்வர் தருண் கோகய் வலியுறுத்தி உள்ளதாக அம்மாநில தொழில்துறை அமைச்சர் பிரதாயூட் தெரிவித்திருந்தார்.

English summary
Tea, apart from its unchallenged popularity in the country as a favourite beverage, has been bearing the memories of the freedom struggle as the then Assamese tea planters like Moniram Dewan fought for the independence of the country inspired by a great fervor of nationalism, which might be considered as a strong reason to declare it as the national drink of India.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X