For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

செங்கல்பட்டு அகதிகள் முகாமில் பதற்றம்- 13 பேர் சாகும் வரை உண்ணாவிரதம்

By Mathi
Google Oneindia Tamil News

செங்கல்பட்டு: செங்கல்பட்டு அகதிகள் தடுப்பு முகாமில் இருந்து தங்களை விடுதலை செய்யக் கோரி ஈழத் தமிழர் 13 பேர் 8-வது நாளாக சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

செங்கல்பட்டில் ஈழத் தமிழர்களை தடுத்து வைக்கக் கூடிய அகதி முகாம் உள்ளது. இந்த முகாமில் பல ஈழத் தமிழர்கள் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் வெளியே செல்ல அனுமதிக்கப்படுவது கிடையாது.

இவர்கள் பலமுறை தங்களை விடுதலை செய்யக் கோரி தொடர் போராட்டங்களையும் நடத்திப் பார்த்துவிட்டனர். ஆனால் பலன் ஏதும் அளிக்கவில்லை.

இதனிடையே உண்ணாவிரதம் இருந்துவருவோரில் ஒருவர் திடீரென மரத்தின் மீது ஏறி தற்கொலைக்கு முயன்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தங்களது போராட்டம் குறித்து தமிழக முதல்வர் ஜெயலலிதா நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பது போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோரின் எதிர்பார்ப்பு

இந்நிலையில் மீண்டும் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தை அவர்கள் தொடங்கியுள்ளனர். இவர்களது நியாயமான போராட்டத்துக்கு அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தமிழ் அமைப்புகள் வலியுறுத்தி வருகின்றன.

English summary
Seeking Tamil Nadu Chief Minister J Jayalalithaa’s intervention for their immediate relocation to normal camps from Chengalpet Special Detention Camp.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X