For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

'ஹோமோ' புகார்... பதவி விலகினார் ஆஸ்திரேலிய நாடாளுமன்ற சபாநாயகர்

Google Oneindia Tamil News

மெல்போர்ன்: ஆஸ்திரேலிய நாடாளுமன்ற சபாநாயகர் பீட்டர் ஸ்லிப்பர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். ஆண் ஊழியர் ஒருவர் ஸ்லிப்பர் தன்னிடம் செக்ஸ் முறைகேட்டில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டைக் கூறியதைத் தொடர்ந்து இந்த விலகல் முடிவை ஸ்லிப்பர் எடுத்தார். இருப்பினும் இது தற்காலிக விலகலே என்றும் தன் மீதான குற்றச்சாட்டுக்களையும் ஸ்லிப்பர் மறுத்துள்ளார்.

முன்னதாக 62 வயதான ஸ்லிப்பர் மீது முன்னாள் ஊழியரான 33 வயது ஜேம்ஸ் ஹன்டர் ஆஷ்பி என்பவர் பாலியல் குற்றச்சாட்டுகளைச் சுமத்தினார். தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி தன்னிடம் தவறாக நடந்து கொண்டார் ஸ்லிப்பர் என்றும் அவர் குற்றம் சாட்டினார். இதுதொடர்பாக சிட்னி கோர்ட்டிலும் அவர் வழக்குத் தொடர்ந்துள்ளார்.

இதையடுத்து தற்காலிகமாக பதவி விலக ஸ்லிப்பர் முடிவு செய்தார். இதையடுத்து துணை சபாநாயகரான அன்னா பர்க் சபாநாயகராக பொறுப்பு வகிப்பார்.

இதற்கிடையே ஸ்லிப்பர் தனது எம்.பி. பதவியையும் ராஜினாமா செய்ய வேண்டும் என்று எதிர்க்கட்சியினர் வலியுறுத்தியுள்ளனர். ஆனால் அதை ஸ்லிப்பர் ஏற்கவில்லை.

English summary
Australia's parliamentary speaker is stepping down temporarily over a sexual harassment lawsuit that threatens to further weaken the prime minister Julia Gillard's hold on power. Peter Slipper issued a statement "emphatically" denying all allegations made against him by a male former staff member. The speaker said he could not continue in his role pending investigation of the allegations in a lawsuit filed in Australia's federal court in Sydney.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X