For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சாதிவாரி சென்ஸஸ்: மனித சாதி, ஆண் சாதி, பெண் சாதி, சாதி இல்லை என எதுவும் கூறலாம்!

By Chakra
Google Oneindia Tamil News

Census
சென்னை: சாதிவாரியான கணக்கெடுப்பில் சாதி என்ற கேள்விக்கு யாராவது மனித சாதி, ஆண் சாதி, பெண் சாதி, சாதி இல்லை என்று எதை கூறினாலும் அப்படியே ஏற்க வேண்டும் என்று இந்தப் பணியில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் சாதிவாரியான கணக்கெடுப்பு நடந்து வருகிறது. இந்தக் கணக்கெடுப்புக்கு பயன்படுத்தப்படும் விண்ணப்பத்தில் 17 கேள்விகள் உள்ளன, அவற்றில் பொருளாதார நிலை மற்றும் சாதி, மதம் குறித்த கேள்விகள் அடக்கம்.
இந்தக் கேள்விகளுக்கு பதில் சேகரிக்கும்போது கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் விவரம்:

எந்த பதிலுக்கும் ஆதராமாக ஆவணங்களைக் கேட்கக் கூடாது.

சாதி பற்றிய கேள்விக்கு பொதுமக்கள் என்ன பதிலை சொன்னாலும் அதை அப்படியே பூர்த்தி செய்ய வேண்டும். உதாரணமாக, மனித சாதி, ஆண் சாதி, பெண் சாதி, சாதி இல்லை என்று கூறினாலும் அப்படியே எழுத வேண்டும்.

சாதியை குறிப்பிட சொல்லி வற்புறுத்தக் கூடாது. தெரியாது என்று கூறினாலும் அதை பதிலாக ஏற்க வேண்டும். ஒருவரின் சாதி பற்றிய விவரத்தை மற்றவரிடம் வெளியிடக் கூடாது.

உங்களது பொருளாதார நிலை பற்றிய தகவல்களை வெளியிடலாம் என்று ஆவணத்தில் கையெழுத்து பெற வேண்டும்.

குடும்ப உறுப்பினர்கள் அனைவரிடமும் தகவல்கள் சேகரிக்கப்பட வேண்டும்.

சாதி பற்றிய தகவல் மிகவும் உணர்ச்சிகரமானது என்பதால் அதை சேகரிக்கும் போது மிகவும் எச்சரிக்கையுடன் இருக்கும்படி கணக்கெடுப்பில் ஈடுபடும் ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

English summary
The socio-economic caste census began in Tamil Nadu. The census will also enumerate the number of people living below the poverty line and the data will show up several key indicators related to the state. Also, district-wise factors can be ascertained. The census commissioner has already written to the collectors and the staff have already been positioned to finish the drive in two months
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X