குடியரசுத் தலைவர் தேர்தலில் பிரணாப் நிறுத்தப்பட்டால் திமுக ஆதரிக்கும்- கருணாநிதி அறிவிப்பு

By:
Subscribe to Oneindia Tamil

Karunanidhi
சென்னை: குடியரசுத் தலைவர் தேர்தலில் நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி நிறுத்தப்பட்டால் அவரை ஆதரிப்போம் என்று திமுக கட்சித் தலைவர் கருணாநிதி அறிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய கருணாநிதி இதனைத் தெரிவித்தார்.

பிரணாப் முகர்ஜியை குடியரசுத் தலைவர் வேட்பாளராக காங்கிரஸ் முன்னிறுத்தினால் ஆதரவு தருவோம் என்று அண்மையில் தம்மைச் சந்தித்த ஏ.கே. அந்தோணியிடம் கருணாநிதி கூறியிருந்ததாகத் தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில் பிரணாப்புக்கு தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மமதா பானர்ஜி ஆகியோர் வெளிப்படையாக ஆதரவு தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து ராஷ்டிரிய லோக்தள் தலைவர் அஜித்சிங்கும் பிரணாப்புக்கு நேற்று தமது ஆதரவை தெரிவித்திருந்தார்.

இதன் பின்னணியில் திமுக தலைவர் கருணாநிதியும் பிரணாப்புக்கான தமது ஆதரவை வெளிப்படையாகத் தெரிவித்திருக்கிறார்.

English summary
DMK leader M.Karunanidhi has sais, his party will support Pranab Mukharjee in presidential election.
Please Wait while comments are loading...