ராஜஸ்தான் பாஜகவிலும் உள்குத்து- வசுந்தரா, 30 எம்.எல்.ஏ.க்கள் விலகல்?

Posted by:
உங்களது ரேட்டிங்:

ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநில பாரதிய ஜனதா தலைவர் கத்தாரியாவுக்கும் வசுந்தரராஜே சிந்தியாவுக்கும் இடையேயான மோதலால் அக்கட்சி பிளவுபடும் நிலைக்குப் போய்விட்டது.

ஜெயப்பூரில் நடைபெற்ற பாஜக ஆலோசனைக் கூட்டத்தில் மாநிலம் முழுவதும் யாத்திரை போகப் போவதாக கத்தாரியா அறிவித்திருந்தார் ஆனால் பாஜக தொண்டர்களுக்கு இந்த யாத்திரையில் விருப்பம் இல்லை என்று வசுந்தரராஜே சிந்தியா கூறினார். இதனால் சலசலப்பு ஏற்பட கட்சிக் கூட்டத்திலிருந்து வெளியேறிய வசுந்தரராஜே, கட்சிப் பதவிகளில் இருந்து விலகப் போவதாக அறிவித்தார்.

அவரைத் தொடர்ந்து அவரது ஆதரவாளர்கள் 30க்கும் மேற்பட்டோரும் தாங்களும் ராஜினாமா செய்யப் போகிறோம் என்று அறிவித்தனர். இதனால் தமது யாத்திரை முடிவை கைவிடுவதாக கத்தாரியா அறிவித்துப் பார்த்தார். ஆனாலும் பிரச்சனை ஓயவில்லை.

அடுத்து நடைபெறக் கூடிய சட்டப்பேரவைத் தேர்தலில் வசுந்தரர்ஜேதான் முதல்வர் வேட்பாளர் என கட்சித் தலைமை அறிவிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். இந்தக் கோரிக்கையை முன்வைத்து ராஜினாமா செய்யப்போவதாக எம்.எல்.ஏக்கள் கூறிவரும் நிலையில் பாஜக இளைஞரணியினர் ராஜினா செய்துவிட்டனர்.

ராஜஸ்தான் மாநில பாஜகவைப் பொறுத்தவரையில் முன்னாள் முதல்வர் வசுந்தராஜே சிந்தியா மட்டுமே தலைவர்- முதல்வர் வேட்பாளர் என்பதே அவரது ஆதரவாளர்களின் முழக்கம். ஆனால் கத்தாரியா தலைமையிலான ஒரு குழுவினர் இதற்கு குடைச்சல் கொடுக்கவே இப்போது கட்சியே பிளவுபடும் நிலைக்குப் போய்விட்டது.

கர்நாடக மாநில பாரதிய ஜனதாவில் பிளவு ஏற்பட்டு எதியூரப்பாவும் சதானந்தாவும் முறைத்துக் கொண்டிருக்கும் நிலையில் ராஜஸ்தான் பாஜகவும் பிளவின் விளிம்பில் தத்தளித்துக் கொண்டிருக்கிறது.

English summary
The crisis in Rajasthan BJP on Sunday intensified with over 30 MLAs loyal to Leader of Opposition Vasundhara Raje offering to resign, a day after she threatened to quit the party over State leader Gulabchand Kataria’s proposed political campaign.
Please Wait while comments are loading...

Videos

 

Skip Ad
Please wait for seconds

Bringing you the best live coverage @ Auto Expo 2016! Click here to get the latest updates from the show floor. And Don't forget to Bookmark the page — #2016AutoExpoLive