For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

எம்.பி.பி.எஸ். படிப்புக்கு ஜுலை 2-ந் தேதி கலந்தாய்வு: தமிழக அரசு

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: எம்.பி.பி.எஸ் படிப்பிற்கான கலந்தாய்வு ஜூலை 2 ம் தேதி நடைபெறும் என்று தமிழக அரசு அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இதற்கான விண்ணப்பங்கள் இம்மாதம் 15-ந் தேதி முதல் வழங்கப்பட உள்ளதாகவும் அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிளஸ்-2 தேர்வு முடிவுகள் வருகிற 22-ந் தேதி வெளியாக உள்ளது. இதற்கிடையே எம்.பி.பி.எஸ். மற்றும் பி.டி.எஸ். முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான அறிவிப்பை தமிழக அரசு நேற்று அதிகாரபூர்வமாக வெளியிட்டுள்ளது.

விண்ணப்ப விநியோகம்

அரசு மற்றும் தனியார் மருத்துவக்கல்லூரிகளில் 2012-2013-ம் ஆண்டிற்கான எம்.பி.பி.எஸ். மற்றும் பி.டி.எஸ். முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான அட்டவணை வெளியிடப்படுகிறது. அதன்படி, விண்ணப்பங்கள் வழங்குதல் குறித்த தகவல்கள் செய்திதாள்களில் 13-ந் தேதி விளம்பரமாக வெளியிடப்படுகிறது.

விண்ணப்பங்கள் வழங்குதல் மற்றும் இணையதளம் மூலம் 15-ந் தேதி தரவிறக்கம் செய்து கொள்ளலாம். மே 30-ந் தேதி மாலை 3 மணி வரை விண்ணப்பங்கள் பெறுவதற்கான கடைசி தேதியாகும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை ஜுன் 2-ந் தேதி, மாலை 5 மணிவரை அளிக்கலாம்.

ரேண்டம் எண்

ஜுன் 15-ந் தேதி சுழற்சி (ரேண்டம்) எண் வழங்கப்படும். ஜுன் 20-ந் தேதி மாணவர்களின் மதிப்பெண் தகுதி அறிவித்தல், ஜுலை 2-ந் தேதி முதற் கட்ட கலந்தாய்வு மூலம் மாணவர்களுக்கு இடஒதுக்கீடு செய்தல் நடைபெறும். இரண்டாம் கட்ட கலந்தாய்வு பற்றிய அறிவிப்பு அகில இந்திய இரண்டாம் சுற்று கலந்தாய்வு முடிந்த பின்னர் இணையதளம் மூலமே வெளியிடப்படும். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

English summary
The sale of applications for MBBS will begin on May 15 and the counselling will start on July 2.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X