For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மனைவியா, துணைவியா??... புது பிரான்ஸ் அதிபருக்கு வந்த முதல் சோதனை!

Google Oneindia Tamil News

Francois Hollande and Valerie Trierweiler
பாரீஸ்: பிரான்ஸின் புதிய அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பிரான்காய்ஸ் ஹோலன்ட்டுக்கு புது சோதனை வந்துள்ளது. அவர் இதுவரை திருமணம் செய்து கொள்ளாதவர். அதேசமயம், திருமணம் செய்யாமலேயே வேலரி டிரையர்வீலர் என்ற பெண்ணுடன் குடும்பம் நடத்தி வருகிறார். எனவே சட்டப்படி வேலரிக்கு அதிபரின் மனைவி என்ற அந்தஸ்தை தர முடியாது என்பதால் பிரெஞ்சு அதிகாரிகள் குழம்பிப் போயுள்ளனராம்.

வெளிநாடுகளில் அதிபர் அல்லது பிரதமருக்கு மனைவி இருந்தாலோ அல்லது கூடவே துணைவியும் இருந்தாலோ கூட பிரச்சினை வராது. ஆனால் கல்யாணம் செய்து கொள்ளாமலேயே குடும்பம் நடத்தும் தலைவர்கள் உயர் பதவிக்கு வரும்போதுதான் ஏகப்பட்ட சிக்கல்கள் வரும்.

அந்த சிக்கல் தற்போது பிரான்ஸுக்கு வந்துள்ளது. நிக்கோலஸ் சர்கோஸியை வீழ்த்தி விட்டு அதிபராகியுள்ள பிரான்காய்ஸ்,இதுவரை திருமணம் செய்து கொள்ளாதவர். அதேசமயம், வேலரி என்பவருடன் லிவ் இன் உறவில் தொடர்ந்து வருகிறார்.

எனவே டெக்னிக்கலாக அதிபரின் மனைவியாக, முதல் பெண்மணியாக இவரை அறிவிக்க முடியாத நிலையில் பிரான்ஸ் அதிகாரிகள் உள்ளனர். அதிபரின் தோழி என்றுதான் இவர்களால் கூற முடியும். அதிபரின் மனைவி என்ற அந்தஸ்தைப் பெற வேண்டுமானால் ஹோலன்ட்டை, வேலரி திருமணம் செய்தாக வேண்டும். அப்போதுதான் அவருக்கு முதல் பெண்மணி என்ற அந்தஸ்தும் கிடைக்கும்.

2006ம் ஆண்டு முதலே இணைந்து வசித்து வருகின்றனர் பிரான்காய்ஸும், வேலரியும். இவர்களின் உறவு பூத்த சமயத்தில், ஏற்கனவே சிகோலின் ராயல் என்ற பெண்மணியுடன் உறவில் இருந்து வந்தார் பிரான்காய்ஸ். 2007 தேர்தல் பிரசாரத்தின்போது கூட இந்தப் பெண்ணுடன்தான் உலா வந்தார் பிரான்காய்ஸ்.

அந்தத் தேர்தலுக்குப் பின்னர் பிரான்காய்ஸும், சிகோலினும் பிரிந்து விட்டனர். பிறகுதான் வேலரியுடன் பகிரங்கமாக வலம் வர ஆரம்பித்தார் பிரான்காய்ஸ். அதிபரின் காதலி என்பதால் அவரை முதல் பெண்மணியமாக அதிகாரப்பூர்வமில்லாமல் அழைக்க முடியும். ஆனால் வெளிநாடுகளுக்குப் போகும்போதுதான் சிக்கலாகும்.

குறிப்பாக வாடிகன் சிட்டிக்குப் போய் போப்பாண்டவரைப் பார்ப்பதாக இருந்தால் நிச்சயம் வேலரியை கூட்டிக் கொண்டு போக முடியாது. அதேபோல இஸ்லாமிய நாடுகளுக்குப் போவதிலும் சிக்கல் வரும். இந்தியா போன்ற திருமண பந்தங்களை தெய்வீகமாக போற்றிக் கொண்டாடும் நாடுகளுக்கு வரும்போதும் தர்மசங்கடமாகும். ஒரு அதிபரின் மனைவிக்குரிய அங்கீகாரத்தை இந்த நாடுகள் தருவதற்குத் தயங்கும்.

எனவே பேசாமல் வேலரியும், ஹோலன்ட்டும் திருமணம் செய்து கொள்வதுதான் நல்லது என்ற பேச்சு பிரான்ஸில் கிளம்பியுள்ளதாம்.

வேலரி ஏற்கனவே 2 முறை திருமணம் செய்து இரு கணவர்களையும் துறந்தவர். 3வதாக பிரான்காய்ஸுடன் வாழ்ந்து வருகிறார். முதல் இரு கணவர்கள் மூலம் வேலரிக்கு தோளுக்கு மேல் வளர்ந்த 2 மகன்கள் இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

பிரான்ஸின் முன்னாள் அதிபரான சர்கோஸியை விட அவரது மனைவி ப்ரூனியைப் பற்றித்தான் ரொம்பப் பேசினார்கள். இப்போது அந்த இடத்தை வேலரி பிடிக்கப் போகிறார் என்பதே இப்போதே தெரிகிறது.

English summary
Seems Valerie Trierweiler will not technically be the First Lady of France even though she might be regarded as such casually. Apparently for her to have that title she and François Hollande would have to be married.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X