For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

இந்தியன் வங்கியின் கடந்த நிதி ஆண்டில் நிகர லாபம் ரூ1747 கோடி

By Mathi
Google Oneindia Tamil News

Indian Bank
இந்தியன் வங்கியின் நிகர லாபம் கடந்த ஆண்டில் ரூ.1,747 கோடியை எட்டி உள்ளது என்று வங்கியின் தலைவர் டி.எம்.பாசின் கூறினார்.

சென்னையில் இந்தியன் வங்கியின் தலைவரும், மேலாண்மை இயக்குனருமான டி.எம்.பாசின் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

மார்ச் மாதத்துடன் முடிவடைந்த 2012-ம் நிதியாண்டில் இந்தியன் வங்கியின் செயல்பாட்டு லாபம் ரூ.3 ஆயிரத்து 463 கோடியாக உயர்ந்துள்ளது.

முந்தைய நிதி நிதியாண்டைவிட 5.2 விழுக்காடு கூடுதல் வளர்ச்சியாகும். கடந்த நிதி ஆண்டில் நிகர லாபம் ரூ.1,714 கோடி.

வட்டியின் மூலம் கிடைக்கும் வருமானம் கடந்த ஆண்டைவிட 30.6 விழுக்காடு உயர்ந்துள்ளது. வட்டி சாராத வருமானம் 9.5 விழுக்காடு உயர்ந்துள்ளது.

வங்கியின் மொத்த வர்த்தகம் 16.8 விழுக்காடு வளர்ச்சி அடைந்துள்ளது., மொத்த டெபாசிட்டுகள் 14.2 விழுக்காடு வளர்ச்சி கண்டுள்ளது.

முன்னுரிமை திட்டங்களுக்கான கடன்கள் 15.6 விழுக்காடு அதிகரித்துள்ளோம். விவசாயக் கடன்கள் 20.9 விழுக்காடு வளர்ச்சி அடைந்துள்ளது.

கல்விக்கடன் ரூ.415 கோடி உயர்ந்து ரூ.3 ஆயிரத்து 222 கோடியாக உள்ளது. இந்த ஆண்டு 93 ஆயிரத்து 215 மாணவர்களுக்கு கடன் வழங்கப்பட்டுள்ளது.

52 கிராமங்களில் வங்கிச் சேவை மையங்கள், 45 கிராமங்களில் நடமாடும் வங்கிக் கிளைகள் தொடங்கப்பட்டுள்ளன. இந்தியன் வங்கியில் 1,955 கிளைகள் உள்ளன. 95 கிளைகள் புதிதாக தொடங்கப்பட்டுள்ளது. வங்கிக்கு 3 வெளிநாட்டு கிளைகள் உள்ளன என்றார் அவர்..

English summary
State-owned Indian Bank hopes to convert a sizeable portion of its non-performing assets (NPA) into performing assets during the current fiscal, a top bank official said Friday.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X