For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

5-வது நாளாக தொடரும் ஏர் இந்தியா விமானிகள் வேலை நிறுத்தம்- பிரதமர் தலையிட வலியுறுத்தல்

By Mathi
Google Oneindia Tamil News

Air India
டெல்லி: அரசுக்கு சொந்தமான ஏர் இந்தியா விமானசேவை நிறுவனத்தின் விமானிகள் 5-வது நாளாக தங்களது போராட்டத்தை நீட்டித்திருப்பதால் பிரதமர் தலையிட வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ட்ரீம்லைனர் விமானங்களை இயக்குவதற்கான பயிற்சி தொடர்பான ஏர் இந்தியா நிர்வாகத்தின் நிலைப்பாட்டில் அதிருப்தி அடைந்த விமானிகள் உடல் நலக்குறைவு என்று காரணம்காட்டி ஒட்டுமொத்தமாக விடுப்பு எடுத்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்தப் போராட்டம் இன்று சனிக்கிழமையன்று 5-வது நாளை எட்டியுள்ளது.

இதனால் மும்பை மற்றும் டெல்லியிலிருந்து இயக்கப்பட வேண்டிய 16 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. விமானிகளின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ள மூத்த விமானிகள் பிரதமர் இந்த விவகாரத்தில் தலையிடக் கோரி கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளனர்.

தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த மேலும் 25 விமானிகளை வெள்ளிக்கிழமையன்று பணிநீக்கம் செய்தது ஏர் இந்தியா. இதனால் பணி நீக்கம் செய்யப்பட்ட விமானிகளின் எண்ணிக்கை 71 ஆக உயர்ந்துள்ளது. மேலும் விமானிகள் சங்க அதிகாரிகள் 11 பேரின் உரிமத்தை ரத்து செய்யுமாறு ஏர் இந்தியா நிர்வாகமானது விமானப் போக்குவரத்து சேவைகள் முகாமைக்கு கடிதம் ஒன்றையும் அனுப்பியுள்ளது.

English summary
With the agitation by Air India pilots entering the fifth day on Saturday, the national carrier cancelled 16 flights from New Delhi and Mumbai even as senior pilots sought the Prime Minister's intervention to end the impasse.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X