தொடரும் ஏர் இந்தியா விமானிகள் வேலை நிறுத்தம்- 6வது நாளாக விமான சேவைகள் ரத்து

Posted by:
 
Share this on your social network:
   Facebook Twitter Google+    Comments Mail

ஏர் இந்தியா விமானிகள் ஸ்டிரைக்- என்னதான் தீர்வு?
டெல்லி: ஏர் இந்தியா நிறுவனத்தின் விமானிகள் தொடர்ந்து 6-வது நாளாக வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டதால் 20 சர்வதேச விமான சேவைகள் இன்றும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

ட்ரீம்லைனர் விமான பயிற்சி விவகாரத்தில் நிர்வாகத்துக்கும் விமானிகளுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து விமானிகள் ஒட்டுமொத்தமாக உடல்நலக் குறைவு என்று கூறி விடுப்பில் சென்றுவிட்டனர். இந்த விவகாரத்தில் உச்சநீதிமன்றம் வரை போனது. பிரதமர் மன்மோகன்சிங்கையும் கூட அமைச்சர் அஜித்சிங் சந்தித்துப் பேசினார். எதுவும் முன்னேற்றம் ஏற்படவில்லை.

ஏர் இந்தியாவை நம்பி முன்பதிவு செய்த நூற்றுக்கணக்கான பயணிகள்தான் ஒவ்வொரு நாளும் தவியாய் தவித்து வருகின்றனர். இன்று மும்பை மற்றும் டெல்லியில் இருந்து 20 சர்வதேவ விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டதால் பயணிகள் பரிதவித்தனர். ஏற்கெனவே 71 விமானிகளை வேலை நிறுத்தம் காரணமாக இடைநீக்கம் செய்திருக்கிறது. 11 அதிகாரிகளின் உரிமத்தை ரத்து செய்யவும் ஏர் இந்தியா பரிந்துரைத்துள்ளது.

கடந்த செவ்வாய்க்கிழமை முதல் மொத்த 200க்கும் மேற்பட்ட பயணிகள் தொடர் வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

English summary
With Air India pilots not budging from their position, their agitation entered the sixth day today leading to cancellation of 20 international flights, causing inconvenience to the hundreds of passengers.
Write a Comment
AIFW autumn winter 2015