காய்கறி விலை கிடுகிடு: விவசாயிகள் மகிழ்ச்சி

By:
Subscribe to Oneindia Tamil

Vegetables
தென்காசி: தென்காசி பகுதியில் காயகறி விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

நெல்லை மாவட்டம் கீழப்பாவூர், மேலப்பாவூர், வி.கே.புதூர், சுரண்டை, வெள்ளக்கால், வீராணம், ஆய்க்குடி பகுதியில் காய்கறிகள் பயிரிடப்படுகின்றன. இங்கு விளையும் காய்கறிகள் நெல்லை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் விற்பனை செய்ய கொண்டு செல்வதுடன் கேரளாவுக்கு அதிக அளவில் அனுப்பப்பட்டு வருகிறது. இதுவரை உரிய விளைச்சல் இருந்தும் விலை இல்லாமல் இருந்து வந்த காய்கறிகளின் விலை தற்போது கிடு கிடுவென உயர்ந்துள்ளது.

20 ரூபாய்க்கு விற்ற கத்தரி, வெண்டை, தக்காளி 40 ரூபாய்க்கும், 3 ரூபாய்க்கு விற்ற மல்லி இலை, கறிவேப்பிலை, அரைக்கீரை, அகத்தி கீரை, தண்டு கட்டு கீரை 7 ரூபாய்க்கும், ரூ. 20க்கு விற்ற தடியங்காய் 40 ரூபாய்க்கும், மாங்காய் ரூ.20லிருந்து 40க்கும், 5 ரூபாய்க்கு விற்ற 1 பூண்டு வாழை இலை 8 முதல் 10 ரூபாய் வரையிலும் விற்கப்பட்டு வருகிறது. காய்கறி விலை அதிகரிப்பால் விவசாயிகளும், வியாபாரிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

English summary
Vegetable prices have increased in Tenkasi. This price rise makes the farmers and merchants happy and people sad.
Please Wait while comments are loading...