ராசாவுக்கு திமுக முழுமையாக துணை நிற்கும்: கருணாநிதி

By:
Subscribe to Oneindia Tamil
Karunanidhi
சென்னை: 2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் முன்னாள் மத்திய தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் ஆ.ராசாவுக்கு ஜாமீன் கிடைத்திருப்பதால் மகிழ்ச்சி அடைகிறேன் என்று திமுக தலைவர் கருணாநிதி கூறினார்.

கோபாலபுரத்தில் நிருபர்களிடம் அவர் கூறியதாவது:

கேள்வி: 15 மாதங்களாக சிறையில் இருந்த ஆ.ராசாவுக்கு ஜாமீன் கிடைத்திருப்பது பற்றி உங்கள் கருத்து என்ன?

பதில்: மகிழ்ச்சி அடைகிறேன்.

கேள்வி: ஜாமீனில் ராசா வெளியே வந்திருப்பது வழக்கை நீர்த்துப் போகச் செய்துவிடும் என்று முதல்வர் ஜெயலலிதா சொல்லியிருக்கிறாரே?

பதில்: அவர் முதலில் அவருடைய பெங்களூர் வழக்கைப் பற்றி பேசட்டும். ராசா வழக்கைப் பற்றி பிறகு பேசலாம்.

கேள்வி: ராசா உங்களை எப்போது சந்திப்பார்?

பதில்: அதெல்லாம் இன்னும் தெரியவில்லை.

கேள்வி: அவர் திமுகவில் தீவிரமாக ஈடுபடுவாரா?

பதில்: அவர் எப்போதும் கழகத்தில் தீவிரமாக ஈடுபடுபவர்தான். புதிதாக அவர் தீவிரமாக ஈடுபடுவாரா என்பதல்ல; தீவிரவாத கருத்து என்பது வன்முறைவாதம் என்று அர்த்தமல்ல.

கேள்வி: கட்சியிலுள்ள எல்லோரும் அவரை ஆதரிப்பார்களா?

பதில்: எல்லோரும் அவரை ஆதரிக்கிறோம்.

கேள்வி: ராசாவைப் பார்க்க டெல்லி செல்லும் வாய்ப்பு இருக்கிறதா?

பதில்: வாய்ப்பு இருந்தால் போவேன்.

கேள்வி: அதிமுக ஆட்சி ஓராண்டு முடிவதாகக் கூறி, மிகப்பெரிய விளம்பரமெல்லாம் செய்கிறார்களே; அதைப் பற்றி உங்கள் கருத்து?

பதில்: ஓராண்டாக, இருண்டு கிடக்கும் தமிழகம் எப்போது விடியுமோ? என்றார்.

மேலும் திமுகவின் கொள்கை பரப்புச் செயலாளராக ராசா தொடர்ந்து நீடிப்பார் என்றும் அந்தக் கட்சி அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

பொருத்தமான வரன் தேடுகிறீர்களா? தமிழ்மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!

English summary
Backing his party colleague A Raja, prime accused in 2G spectrum scam, DMK chief Karunanidhi expressed happiness over his securing bail. "All in DMK support Raja," Karunanidhi said, hours after a Delhi court granted bail to the former Union Telecom Minister.
Please Wait while comments are loading...