For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மே இறுதியில் அல்லது ஜூனில் தென்மேற்கு பருவமழை துவங்கும்: வானிலை ஆய்வு மையம்

Google Oneindia Tamil News

Monsoon
நெல்லை: கேரள கடலோரப் பகுதிகளில் தென்மேற்கு பருவ மழை ஜூ்ன் 1ம் தேதிக்கு முந்தைய இரண்டு நாட்களிலோ அல்லது பிந்தைய இரண்டு நாட்களிலோ துவங்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறுகையில்,

விவாசயம் சார்ந்த இந்திய பொருளாதாரத்திற்கு தென்மேற்கு பருவ மழை மிகவும் அவசியம். நான்கு மாத காலம் பெய்யும் இந்த பருவமழை கேரள கடலோர பகுதிகளில் ஜூன் மாதம் தொடங்கும். இந்த ஆண்டு ஜூன் முதல் தேதிக்கு முந்தைய இரண்டு நாட்களிலோ அல்லது பிந்தைய இரண்டு நாட்களிலோ துவங்கலாம்.

முதலில் கேரள கடல் பகுதியில் துவங்கும் தென்மேற்கு பருவ மழை பிறகு படிப்படியாக மற்ற பகுதிகளுக்கும் விரிவடையும். தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக இந்த ஆண்டும் பருவ மழை வழக்கமான அளவுககு பெய்யும். பருவமழை வழக்கத்தை விட குறைவாக பெய்வதற்கான வாய்ப்புகள் இல்லை என கடந்த மாதமே வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது என்றனர்.

English summary
Metoerological department has announced that southwest monsoon season will start in the coastal areas of Kerala either by the end of may or by the beginning of june.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X