கட்சி தலைவர்களின் பிரச்சார செலவுகள் வேட்பாளர் கணக்கில் சேராது: தேர்தல் பிரிவுத்துறை அறிவிப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை: அனுமதிக்கப்பட்ட கட்சித் தலைவர்களின் தேர்தல் பிரச்சார செலவுகள் வேட்பாளர் கணக்கில் சேராது என்று தேர்தல் பிரிவுத்துறை அறிவித்துள்ளது.

இது குறித்து அது வெளியி்ட்டுள்ள அறிவி்ப்பில் கூறியிருப்பதாவது,

1981ம் ஆண்டு மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 77வது பிரிவின்படி அங்கீகரிக்கப்பட்ட வேட்பாளர் அல்லது அவரது முகவரி செலவு கணக்கில் விமானம் மூலமாகவோ அல்லது வேறு வழியிலோ தேர்தல் பிரச்சாரத்திற்கு வரும் அரசியல் கட்சி தலைவர்களின் செலவு சேராது.

அங்கீகரிக்கப்படாத கட்சிகளின் 20 தலைவர்களுக்கும், அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளின் 40 தலைவர்களுக்கும் அவரது பெயர்கள் இந்திய தேர்தல் ஆணையத்திடமோ அல்லது தமிழ்நாடு தேர்தல் அதிகாரியிடமோ கொடுக்கப்பட்டால் இந்த பயனை பெறலாம்.

அறிவிக்கையின் துணை பிரிவில் 1-ன் கீழ் விளக்கம் 2-ன் கீழ் 7 நாட்களுக்குள் அவர்களது பெயர்கள் தரப்பட வேண்டும். புதுக்கோட்டை சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தல் அறிவிக்கை 18.5.12 அன்று வெளியிடப்பட்டது.

விதிவிலக்கு பெற விரும்பும் தலைவர்கள் பெயர்களை இந்திய தேர்தல் ஆணையத்திடமோ, தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரியிடமோ மே 25ம் தேதி அல்லது அதற்கு முன்பாக தெரிவிக்க வேண்டும்.

தேர்தல் ஆணையத்திடமோ, தலைமை தேர்தல் அதிகாரிடமோ தெரிவிக்கப்பட்ட பெயர்களை தவிர வேட்பாளருக்காக பிரச்சாரம் செய்யும் மற்ற தலைவர்களின் செலவினங்கள் வேட்பாளர் கணக்கில் சேர்க்கப்படும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொருத்தமான வரன் தேடுகிறீர்களா? தமிழ்மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!

English summary
Election commission has announced that party leaders' campaign expenses won't be included in candidates' expenses.
Please Wait while comments are loading...