டாஸ்மாக்கின் ஹாப்சன்ஸ் எக்ஸ்ஆர் பிராந்தியை எப்படிக் குடிக்கணும் தெரியுமா?

Posted by:
 
Share this on your social network:
   Facebook Twitter Google+ Comments Mail

Hobsons XR Brandy
சென்னை: டாஸ்மாக் கடைகளில் புதிய வகை பிரெஞ்சு பிராந்தி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதை எப்படிக் குடிக்க வேண்டும் என்பது குறித்து ஒரு செயல்முறை விளக்கம் அளித்துள்ளனர் அந்த பிராந்தியை தமிழகத்தில் அறிமுகம் செய்துள்ள நிறுவனத்தார்.

பிரான்ஸ் நாட்டில் புகழ் பெற்ற கிரேப் பிராந்தியான இந்த ஹாப்சன்ஸ் எக்ஸ்ஆர் பிராந்தியை டாஸ்மாக் கடைகளில் கேட்டு வாங்கிக் குடிக்கலாம். ஆனால் வழக்கமான மது வகைகளைப் போல குடிக்காமல் இதைக் குடிக்க விசேஷ பயிற்சி தேவைப்படுமாம். அதைத்தான் இந்த பிராந்தியை தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளில் அறிமுகம் செய்துள்ள ஜியோஸ்பேஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ராஜா விளக்கம் அளித்துள்ளார்.

டாஸ்மாக் கடைகளில் இந்த வகை பிராந்தி விதம் விதமான அளவில் கிடைக்கிறது. சரி இதை எப்படிக் குடிக்க வேண்டும் என்று தெரியுமா... ராஜா சொல்வதைக் கேளுங்கள்..

கால் உள்ள நீளமான கண்ணாடிக் கிளாஸில்தான் இதை ஊற்றிக் குடிக்க வேண்டும். அதற்கு முன்பாக இந்த கிளாஸை, பிராந்தியை ஊற்றி சுத்தம் செய்து கொள்ள வேண்டும்.

அதன் பின்னர் கிளாஸில், 20 சதவீதம் பிராந்தியை ஊற்றி, அதில் 40 சதவீதம் தண்ணீர் சேர்த்துக் கொள்ள வேண்டும். ஐஸ் கட்டிகளைச் சேர்ப்பதைத் தவிர்க்க வேண்டும். இல்லாவிட்டால் சுவை மாறி விடும்.

அதன் பிறகு குடிக்க வேண்டியதுதான். ஆனால் கிளாஸின் மேல் பகுதியில் கையை வைத்து பிடித்து குடிக்கக் கூடாது. அப்படிச் செய்தால் கையில் உள்ள சூடு பிராந்திக்குப் பரவி சுவை மாறி விடலாம். எனவே கிளாஸின் கால் பகுதியில் பிடித்துத்தான் நாசூக்காக வாயில் தள்ள வேண்டும்.

முதலில் ஸ்மெல் பண்ணுங்க. அதன் சுவையை நுகர்ந்த பின்னர் மெதுவாக அருந்தவும். பிராந்தியின் விசேஷமே அதில் உள்ள திராட்சையின் சுவைதான். மெதுமெதுவாக குடிக்கும்போது மகா ஆனந்தமாக இருக்குமாம்.

இதற்கு சைடு டிஷ்ஷாக கண்டதையும் சாப்பிடக் கூடாது. சிப்ஸ், ஊறுகாய் என வழக்கமாக் போகாமல் பழ வகைகளைச் சாப்பிடலாம். வெள்ளரிக்காய், தக்காளி, பீட்ரூட், முட்டை கோஸ், கேரட், பீன்ஸ் போன்றவையும் நல்ல சைடு டிஷ்தான்.

ஒரு பெக் அடித்த பின்னர் 15 மணி நேரம் கேப் விட வேண்டுமாம், பிறகு இன்னொரு பெக் அடிக்கலாமாம். இப்படியே ஒரு 30 மில்லி வரை அடிக்கலாமாம். வாரத்திற்கு 2 நாள் மட்டும் குடிக்காமல் லீவு விட வேண்டும். இந்த பிராந்தியைக் குடிப்போரின் வாய் முழுவதும் திராட்சை மணம் வீசுமாம்.

தமிழ்நாட்டுக்கேற்ற நல்ல செயல்முறை விளக்கம்தான்...!

English summary
Hobsons, world's first XR brandy, is currently available at select outlets in Tamilnadu, Karnataka, Andhra Pradesh and Puducherry and Goa. Hobsons XR - a brandy with floral notes, with an opening nose of vanilla, honey and prune that evolves to mellow wine, sweet oak accents and finishes with a satin smooth, languid fade.
Please Wait while comments are loading...
Your Fashion Voice

Videos

Advertisement
Content will resume after advertisement