அடங்கொப்புரானே... கூட்டத்தில் ஆள் தெரியாமல் வேறு பெண்ணுக்கு தாலி கட்டிய மாப்பிள்ளை!

Posted by:
 
Share this on your social network:
   Facebook Twitter Google+ Comments Mail

சிவகங்கை: சிவகங்கையில் நேற்று ஒரு பெரிய கூத்து நடந்து விட்டது. அதாவது அங்குள்ள சிவன் கோவிலில் நடந்த ஒரு திருமணத்தின்போது கூட்ட நெரிசலால் தனது மணப்பெண் யார் என்று தெரியாமல் அருகில் நின்றிருந்த இன்னொரு மணப்பெண்ணுக்குத் தாலி கட்டி விட்டார் மாப்பிள்ளை.

வைகாசி மாதம் என்றாலே தமிழகத்தில் திருமணங்கள் தடபுடலாக நடப்பது வழக்கம். நேற்றும் முகூர்த்த நாள். இதனால் சிவகங்கையில் ஏகப்பட்ட திருமணங்கள் அலைமோதியபடி இருந்தன. அங்குள்ள சிவன் கோவிலில் நேற்று 30க்கும் மேற்பட்ட ஜோடிகளுக்குத் திருமணம் நடந்தது.

ஒவ்வொரு ஜோடிக்கும் ரசீது கொடுத்து, திருமணத்தைப் பதிவு செய்து முறைப்படி நடத்தினர்.

அப்போது இரு ஜோடி மணமக்கள் அருகருகே அமர்ந்திருந்தனர். கூட்டம் கட்டி ஏறிக் கொண்டிருந்தது. தாலி கட்டும் நேரத்தில் பெரும் குழப்பமாகி விட்டது. ஒரு மாப்பிள்ளை, தனது மணமகளுக்குக் கட்டுவதற்குப் பதில், அருகில் இருந்த இன்னொரு மணமகளுக்குத் தாலி கட்டி விட்டார். இதனால் இரு தரப்பு உறவினர்களுக்கும் இடையே கடும் மோதலாகி விட்டது. சூடான வாதங்கள் பாய்ந்தன.

இந்த நிலையில் தாலி கட்டப்பட்ட மணப்பெண் எழுந்து, தெரிந்தோ தெரியாமலோ எனது கழுத்தில் தாலி கட்டி விட்டார். இதை பிரிப்பது சரியாக முறையாக இருக்காது. இவருடனேயே வாழ்ந்து விடுகிறேன், எங்களைப் பிரித்து விடாதீர்கள் என்று கோரிக்கை விடுத்தார்.

இதையடுத்து வேறு வழியில்லாமல் நான்கு குடும்பத்தினரும் அமைதியடைந்தனர். அதன் ஜோடி மாறிப் போன பெண்ணுக்கும், மாப்பிள்ளைக்கும் திருமணம் செய்து வைத்து அழைத்துச் சென்றனர்.

English summary
A bridegroom tied the knot to some other woman during marriage instead of his bride in Sivagangai.
Please Wait while comments are loading...
Your Fashion Voice

Videos

Advertisement
Content will resume after advertisement