முல்லைப் பெரியாறு அணைக்கு மத்திய பாதுகாப்பு படையை அனுப்புங்கள்: மன்மோகனுக்கு ஜெயலலிதா கடிதம்

By:
Subscribe to Oneindia Tamil

Jayalalitha
டெல்லி: முல்லைப் பெரியாறு அணையின் பாதுகாப்புக்கு மத்திய படைகளை நிறுத்த வேண்டும் என்று பிரதமர் மன்மோகன்சிங்குக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார்.

முல்லைப் பெரியாறு அணையின் ஆய்வுக்காக தோண்டப்பட்ட துளைகளை அடைக்க அண்மையில் தமிழக அதிகாரிகள் சென்றிருந்தனர். ஆனால் அவர்களை கேரள அதிகாரிகள் தடுத்து தாக்கியுள்ளனர்.

இதைத் தொடர்ந்து தமிழக முதல்வர் ஜெயலலிதா இந்த விவகாரம் குறித்து இன்று பிரதமர் மன்மோகன்சிங்குக்கு கடிதம் அனுப்பியுள்ளார். அதில் கேரளத்தின் அடாவடியை சுட்டிக்காட்டியுள்ளதுடன் அணையின் பாதுகாப்புக்கு மத்திய படைகளை நிறுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

முல்லைப் பெரியாறு அணையின் பாதுகாப்புக்கு மத்திய படைகள் நிறுத்தப்படவில்லை எனில், தமிழக போலீசாரையே அங்கு நிறுத்த நேரிடும் என்றும் பிரதமருக்கு ஜெயலலிதா தமது கடிதத்தில் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

English summary
Tamil Nadu Chief Minister J Jayalalithaa has written to Prime Minister Manmohan Singh, complaining about Kerala's "reprehensible" attitude over the Mullai Periyar Dam issue.
Please Wait while comments are loading...