கடும் கடல் சீற்றம்.. காற்று வாங்க மெரீனாவுக்கு வந்த மக்கள் பீதி

Posted by:
 
Share this on your social network:
   Facebook Twitter Google+ Comments Mail

Marina Beach
சென்னை: கடல் சீற்றத்துடன் காணப்பட்டதால் காற்று வாங்குவதற்காக மெரீனா கடற்கரைக்கு வந்த மக்கள் பீதியடைந்தனர்.

அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெயில் முடிந்து விட்டது. ஆனாலும் வெயில் கொடுமை இன்னும் போகவில்லை. தொடர்ந்து கடும் வெயில் அடித்து வருகிறது.

வெயில் கடுமையாக இருப்பதால் சென்னை மக்கள் மாலை நேரங்களில் மெரீனா கடற்கரைக்கும், பெசன்ட் நகர், சீனிவாசபுரம், பட்டினப்பாக்கம் கடல் பகுதிக்கும் படையெடுக்கின்றனர்.

இன்று இதுபோல காற்று வாங்க வந்த மக்கள் கடல் சீற்றத்துடன் காணப்பட்டதால் பீதியடைந்தனர். போலீஸார் கடலில் யாரும் குளிக்க வேண்டாம் என்று தடுத்து நிறுத்தினர். இதனால் வெயில் புழுக்கத்திலிருந்து தப்பிக்க கடலில் குளியல் போட நினைத்த மக்கள் ஏமாற்றமடைந்தனர்.

English summary
Rough sea panicked Chennaites today. Police banned sea bathers to take a dip.
Please Wait while comments are loading...

Videos