இடைத்தேர்தல்: இன்று முதல் 3 நாட்களுக்கு புதுக்கோட்டையில் பிரேமலதா விஜயகாந்த் பிரச்சாரம்

Posted by:
 
Share this on your social network:
   Facebook Twitter Google+    Comments Mail

புதுக்கோட்டை இடைத்தேர்தல்: முதலில் மனைவியை பிரச்சாரத்திற்கு அனுப்பும் விஜயகாந்த்
புதுக்கோட்டை: இடைத்தேர்தலை முன்னிட்டு தேமுதிக தலைவர் விஜயகாந்தின் மனைவி பிரேமலதா இன்று முதல் 3 நாட்களுக்கு புதுக்கோட்டையில் பிரச்சாரம் செய்கிறார்.

புதுக்கோட்டை இடைத்தேர்தல் வரும் 12ம் தேதி நடக்கிறது. இதில் தேமுதிக சார்பில் ஜாகீர் உசேன் போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து அக்கட்சியின் தலைவர் விஜயகாந்தின் மனைவி இன்று முதல் 5ம் தேதி வரை தொடர்ந்து 3 நாட்களுக்கு புதுக்கோட்டையில் பிரச்சாரம் செய்கிறார்.

அவர் இன்று பிற்பகல் 3 மணிக்கு கறம்பக்குடி ஒன்றியம் களபத்தில் இருந்து தனது பிரச்சாரத்தை தொடங்கி ஆண்டிக்கோன்பட்டி, வளங்கொண்டான்விடுதி, கோட்டைக்காடு, தெற்கு பொன்னன்விடுதி உள்ளிட்ட இடங்களில் வாக்கு சேகரிக்கிறார். நாளை மாலை 4 மணிக்கு புதுக்கோட்டை நகரில் உள்ள திருவப்பூர் ஈஸ்வரன் கோவிலில் தொடங்கி ராஜகோபாலபுரம் வரை தனது கட்சி வேட்பாளரை ஆதரித்து பேசுகிறார். இறுதி நாளான 5ம் தேதி மாலை 5 மணிக்கு புதுக்கோட்டை ஒன்றியம் இச்சடியில் தொடங்கி கம்மங்காடு விலக்கு ரோடு வரை பிரச்சாரம் செய்கிறார். அத்துடன் அவர் தனது பிரச்சாரத்தை முடித்துக் கொள்கிறார்.

அவரை அடுத்து அவரது கணவர் விஜயகாந்த் வரும் 6ம் தேதி முதல் 8ம் தேதி வரை தொடர்ந்து 3 நாட்களுக்கு தொகுதியில் பிரச்சாரம் செய்கிறார். வரும் 6ம் தேதி பிற்பகல் 3 மணிக்கு கறம்பக்குடி ஒன்றியம் மாங்கோட்டையில் இருந்து தனது பிரச்சாரத்தை துவங்கும் அவர் திறந்த வேனில் மக்களை சந்தித்து வாக்கு கேட்கிறார்.

தொடர்ந்து மேலப்பட்டி, மழையூர், வலங்கொண்டான் விடுதி, மில்லுக்கடை, புதுப்பட்டி, மஞ்சுவிடுதி ஆர்ச், கருக்காகுறிச்சித் தெற்கு தெரு, வாணக்கன்காடு, முள்ளங்குறிச்சி, சுரக்காடு, வெட்டன்விடுதி ஆகிய இடங்களில் தனது கட்சி வேட்பாளர் ஜாகீர் உசேனுக்கு வாக்கு சேகரிக்கிறார்.

வரும் 7ம் தேதி மாலை 4.30 மணிக்கு பிரச்சாரத்தை துவங்கும் அவர் புதுக்கோட்டை ஒன்றியம் பாலன்நகர் கார்னரில் தொடங்கி திருவப்பூர் ரயில்வே கேட், திருக்கோகர்ணம் மியூசியம், அடப்பன்வயல் பள்ளிவாசல், வடக்கு 4-ம் வீதி கார்னர், மச்சுவாடி கொட்டகைகாரர் தெரு, காமராஜபுரம் எல்லை அம்மன் கோவில் தெரு, போஸ்நகர்(நேதாஜி சிலை), காந்திநகர் 6வது வீதி, மேட்டுப்பட்டி கார்னர், திருமலைராய சமுத்திரம், உசிலங்குளம் பஸ் நிறுத்தம், டி.வி.எஸ்.கார்னர், ராம் தியேட்டர் கவிநாடு கிழக்கு ஆகிய இடங்களில் மக்களை சந்தித்து ஆதரவு கேட்கிறார்.

இறுதி நாளான 8ம் தேதி அன்று மாலை 4 மணிக்கு புதுக்கோட்டை ஒன்றியம் முள்ளூரில் தனது பிரச்சாரத்தை தொடங்கி வடவாளம், மாத்தூர்-பி, சம்பட்டிவிடுதி 4 ரோடு, வாராப்பூர், ஆதனக்கோட்டை, பெருங்களூர், மாந்தாங்குடி, புத்தாம்பூர் ஆகிய இடங்களில் வாக்கு சேகரித்துவிட்டு செம்பாட்டூரில் தனது பிரச்சார பயணத்தை நிறைவு செய்கிறார்.

English summary
DMDK chief Vijayakanth's wife Premalatha Vijayakanth is going to campaign in Pudukkottai from today till june 5th ahead of the bypoll. Vijayakanth will campaign there from june 6-8.
Write a Comment
AIFW autumn winter 2015