புதுக்கோட்டை: அதிமுக வேட்பாளர் காரில் அமைச்சர் முன்னிலையில் சோதனை- பரபரப்பு

உங்களது ரேட்டிங்:

புதுக்கோட்டை: அ.தி.மு.க. வேட்பாளர் கார்த்திக் தொண்டைமான் சென்ற காரை போலீசார் சோதனையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

புதுக்கோட்டை இடைத் தேர்தலை முன்னிட்டு அதிமுக வேட்பாளர் கார்த்திக் தொண்டைமான் தீவிர தேர்தல் பிரச்சாரம் செய்து வருகின்றார். அவருக்கு ஆதரவாக 32 தமிழக அமைச்சர்களும், கட்சியின் முக்கிய நிர்வாகிகளும், தொண்டர்களுடன் தீவிர பிரசாரம் செய்து வருகின்றனர். இந்த நிலையில், மேட்டுப்பட்டி பகுதியில் தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் கோகுல இந்திராவுடன் இணைந்து அதிமுக வேட்பாளர் கார்த்திக் தொண்டைமான் வாக்கு சேகரித்தார்.

வாக்கு சேகரிப்பு நிகழ்வுக்கு பின்பு கோகுல இந்திரா, கார்திக் கொண்டைமான் ஆகியோர் ஒரே காரில் அடுத்த இடத்துக்குப் புறப்பட்டனர். அப்போது வேட்பாளரின் கார் கேப்பரை செக்போஸ்ட்டை தாண்டிச் செல்ல முயன்றது. அங்கு நின்றிருந்த போலீசார் வேட்பாளரின் காரை நிறுத்தி சோதனையிட்டனர். காரில் போலீசார் எதிர்பார்த்த பணமோ அல்லது பொருட்களோ எதுவும் கிடைக்கவில்லை. இதனையடுத்து கார்த்திக் தொண்டைமான், அமைச்சர் கோகுல இந்திரா ஆகியோரை அங்கிருந்து போலீசார் அனுப்பி வைத்தனர்.

இந்த நிலையில் அதிமுக வேட்பாளர் காரை போலீசார் சோதனையிடுகினறனர் என்ற தகவல் அறிந்து அந்த பகுதியில் அதிமுகவினர் குவிந்துவிட்டனர். இதனையறிந்த போலீசாரும் அங்கு போலீஸ் படையை குவித்தனர். இதனால் அங்கு சிறது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

English summary
Police raided the Pudukottai ADMK candidate Karthik Thondaman car during the routine vehicle Check up.
Please Wait while comments are loading...
2016 Tamil Nadu Election

Videos