மீண்டும் சர்ச்சையில் என்.சி.இ.ஆர்.டி: இந்தி எதிர்ப்பு போரை விமர்சித்து கேலி சித்திரம் -வைகோ கண்டனம்

Posted by:
 
Share this on your social network:
   Facebook Twitter Google+ Comments Mail

Vaiko
சென்னை: மத்திய அரசின் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கழகத்தின் புத்தகத்தில் தமிழர்களின் நெஞ்சுறுதிமிக்க இந்தி எதிர்ப்புப் போரை விமர்சிக்கும் வகையிலான கேலிச் சித்திரம் இடம்பெற்றிருப்பதற்கு மறுமலர்ச்சி திமுக பொதுச்செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக மத்திய அமைச்சர் கபில்சிபல் மற்றும் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கழகத்தின் இயக்குனர் ஆகியோருக்கு வைகோ அனுப்பியுள்ள கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது:

தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக் கழகம் அச்சிட்டு உள்ள பனிரெண்டாம் வகுப்பு அறிவியல் பாட புத்தகத்தின் 153 -ம் பக்கத்தில் விடுதலைக்குப் பிறகு இந்திய அரசியல் என்ற தலைப்பில் ஒரு கேலி சித்திரம் வெளியாகி இருக்கின்றது.

பிரதமர் நேருவால் வழங்கப்பட்ட உறுதி மொழிக்கு மாறாக, 1965-ம் ஆண்டு, இனி இந்தி மட்டுமே இந்தியாவின் ஆட்சி மொழி என்ற சட்டத்தை நிறைவேற்ற முயன்றார்கள்.

அதை எதிர்த்து, திராவிட முன்னேற்றக்கழகத்தின் நிறுவனர் அண்ணா போர்ப்பறை முழங்கினார். 1930-களில் சென்னை மாகாணத்தில் இந்தியைத் திணிக்க முயன்ற ராஜாஜி அவர்களே 1965-ம் ஆண்டு, இந்திய அரசு இந்தியைத் திணிக்க முயற்சிப்பதைக் கடுமையாக எதிர்த்தார். கட்டாய இந்திக்கு எதிர்ப்பு தெரிவித்து எட்டுத் தமிழர்கள் தீக்குளித்து மடிந்தார்கள்.

பல்லாயிரக்கணக்கான மாணவர்களும், லட்சக்கணக்கான பொதுமக்களும், ராணுவ, போலீஸ் அடக்குமுறைகளை எதிர்கொண்டு, இந்தி எதிர்ப்புப் போரை நடத்தினர். தமிழக அரசியல் வரலாற்றில், இந்தி எதிர்ப்புப் போராட்டம் வைரவரிகளில் இடம் பெற்று இருக்கின்றது.

ஆனால் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக் கழகம் வெளியிட்டு உள்ள கேலிச்சித்திரம், மாணவர்கள் மொழிப் பிரச்சினையைப் புரிந்து கொள்ளாமல் இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டதாகக் கொச்சைப்படுத்துகிறது. இது கண்டனத்திற்குரியது. வரலாற்று உண்மையை திருத்திக் கூறுவது ஆகும்.

இக்கேலிச்சித்திரம், தமிழக மக்களின் மனங்களைக் காயப்படுத்துகின்றன. புகழ்மிக்க திராவிடர் இயக்கத்தை இழிவு படுத்துகின்ற வகையில் அமைந்து உள்ளது. தமிழக மக்களின் உணர்வுகளைப் புண்படுத்துகின்றது என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

English summary
Close on the heels of Parliamentarians going up in arms over a cartoon concerning B R Ambedkar in NCERT books, another such row erupted today with MDMK leader Vaiko protesting against depiction of the anti-Hindi agitation in Tamil Nadu in Class XII books.
Please Wait while comments are loading...
Your Fashion Voice

Videos

Advertisement
Content will resume after advertisement