குடும்பத் தகராறில் தாய்-தந்தை வெட்டிக் கொலை: மகன் வெறிச்செயல்

Posted by:
 
Share this on your social network:
   Facebook Twitter Google+ Comments Mail

Murder
கடையநல்லூர்: கடையநல்லூரில் குடும்பத் தகராறில் தாய்-தந்தையை மகனே கொடூரமாக வெட்டிக் கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடையநல்லூர் மாவடிக்கால் ரயில்வே பீடர் ரோட்டைச் சேர்ந்தவர் தர்மர் என்ற முத்துசாமி. இவர் தவணை முறையில் வீடு, வீடாகச் சென்று ஜவுளி வியாபாரம் செய்து வந்தார். இவரது மனைவி அய்யம்மாள். இவர்களுக்கு மணிகண்டன் என்ற மகளும், சண்முகத்தாய் என்ற மகளும் உள்ளனர். மணிகண்டனுக்கு திருமணமாகி பெற்றோர் வசிக்கும் வீட்டின் மாடியில் குடியிருந்து வருகிறார். கருத்து வேறுபாட்டால் கணவரை பிரிந்த சண்முகத்தாய் தனது மகனுடன் பாளையங்கோட்டையில் வேறு ஒருவருடன் வசித்து வருகிறார். இது மணிகண்டனுக்கு மிகுந்த அவமானத்தை ஏற்படுத்தியது.

இந்நிலையில் சண்முகத்தாய் அடிக்கடி தனது பெற்றோரை தொடர்பு கொண்டு பேசி வந்தார். மேலும் மாவடிக்காலில் குடியேறவும் அவர் விருப்பம் தெரிவித்துள்ளார். இதற்கு பெற்றோரும் சம்மதம் தெரிவித்தனர். நேற்று முன்தினம் தர்மரும், அய்யம்மாளும் பாளையங்கோட்டையில் உள்ள சண்முகத்தாய் வீட்டுக்கு சென்று பேரனை அழைத்துக் கொண்டு மாவடிக்கால் வந்தனர். இது மணிகண்டனுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. தங்கை மகனை அழைத்து வந்தது குறித்து அவர் பெற்றோருடன் நேற்று இரவு கடும் வாக்குவாதம் செய்தார். திடீரென அவர் அரிவாளால் பெற்றோரை சரமாரியாக வெட்டினார். இதில் இருவரும் ரத்த வெள்ளத்தில் துடி துடித்து இறந்தனர். பின்னர் மணிகண்டன் அங்கிருந்து ஓடிவிட்டார்.

இந்த இரட்டை கொலை குறித்து அப்பகுதி மக்கள் கடையநல்லூர் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். சப்-இன்ஸ்பெக்டர் சிவன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். உடல்களைக் கைப்பற்றி பிரதே பரிசோதனைக்காக கடையநல்லூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தலைமறைவான மணிகண்டனை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் கடையநல்லூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

English summary
Kadayanallur based Manikandan hacked his parents to death over family problem.
Please Wait while comments are loading...
Your Fashion Voice

Videos

Advertisement
Content will resume after advertisement