அட! குடியரசுத் தலைவர் தேர்தலில் பிரணாப் முகர்ஜியை ஆதரிக்கிறது ஜெகனின் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ்

By:
Subscribe to Oneindia Tamil

Jagan Mohan Reddy
ஹைதராபாத்: குடியரசுத் தலைவர் தேர்தலில் மற்றும் ஒரு புதிய திருப்பமாக ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி, ஐக்கிய முற்போக்குக் கூட்டணி வேட்பாளர் பிரணாப் முகர்ஜியை ஆதரிக்க முடிவு செய்துள்ளது.

குடியரசுத் தலைவர் தேர்தலில் யாருக்கு ஆதரவு என்பதை அறிவிக்காத கட்சிகளில் ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸும் ஒன்று. சில வாரங்களுக்கு முன்பு ஜெகனை சிறையில் சந்திக்க எதிர்க்கட்சி வேட்பாளர் சங்மா ஹைதராபாத்தில் டேரா போட்டிருந்தார். ஜெகனை சந்திக்க முடியாத நிலையில் அவரது தயார் விஜயாம்மாவை நேரில் சந்தித்து தமக்கு ஆதரவு கோரியிருந்தார்.

இந்நிலையில் பாஜக அணியில் இணைவதால் மதச்சார்பு அடையாளம் வந்துவிடுமோ என்று ஜெகன் கருதுவதால் பிரணாப் முகர்ஜியையே ஆதரிக்கலாம் என்று அவர் முடிவு செய்திருப்பதாகக் கூறப்படுகிறது. ஆந்திராவில் காங்கிரஸின் வாக்குகளை கவர இதுவே யுத்தியாக இருக்கும் என்றும் ஜெகன் கருதுகிறாராம். ஜெகன் மோகன் ரெட்டியின் இம்முடிவு பி.ஏ.சங்மாவுக்கு பெரும் ஏமாற்றத்தைத் தரக்கூடியதுதான்.அனேகமாக ஓரிருநாட்களில் அதிகாரப்பூர்வமான அறிவிப்பை ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் வெளியிடக் கூடும் எனக் கூறப்படுகிறது.

பொருத்தமான வரன் தேடுகிறீர்களா? தமிழ்மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!

English summary
The YSR Congress seems to have decided to vote for UPA presidential candidate Pranab Mukherjee. Stating that a formal announcement was exp-ected within a few days, YSR Congress sources said that party president Y.S. Jagan Mohan Reddy had decided to support Mr Mukherjee over the BJP-sponsored candidate P.A. Sangma.
Please Wait while comments are loading...