For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நெருங்கும் கலிபோர்னியா தீர்ப்பு... கொடைக்கானிலிருந்து மதுரைக்கு ஓடி வந்தார் நித்தியானந்தா!

Google Oneindia Tamil News

மதுரை: அமெரிக்காவின் கலிபோர்னியா கோர்ட்டில் தனது மடத்தின் நிதி மோசடிகள் தொடர்பான வழக்கில் தண்டனை அறிவிக்கப்படவுள்ளதைத் தொடர்ந்து நித்தியானந்தா தனது கொடைக்கானல் முகாமை ரத்து செய்து விட்டு மதுரைக்கு ஓடி வந்துள்ளார்.

கலிபோர்னியா கோர்ட்டில் நித்தியானந்தாவுக்குத் தண்டனை விதிக்கப்பட்டால் அவரை பதவியிலிருந்து நீக்குவேன் என்று மதுரை ஆதீனம் வேறு அதிரடியாக பேட்டி அளித்துள்ளதால், பீதியடைந்தே நித்தியானந்தா மதுரைக்கு ஓடி வந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றனர்.

அமெரிக்காவில் செயல்பட்டு வரும் நித்தியானந்தாவின் அத்தனை மடங்களும் மோசடியானவை, பணப் பறிப்பில் ஈடுபட்டுள்ளன என்று கலிபோர்னியா கோர்ட் தீர்ப்பளித்துள்ளது. இந்த மோசடியில் ஈடுபட்டதற்காக நித்தியானந்தா உள்ளிட்டோர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளதால் நித்தியானந்தாவுக்கும் தண்டனை அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தண்டனை விவரம் ஜூலை 19ம் தேதி அறிவிக்கப்படவுள்ளது.

இதனால் நித்தியானந்தா பெரும் பீதியில் உள்ளார். மேலும் மதுரை ஆதீனத்திற்கும் பெரும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. நித்தியானந்தாவுக்கு தண்டனை விதிக்கப்பட்டால் என்ன செய்வீர்கள் என்று செய்தியாளர்கள் அதீனத்திடம் கேட்டபோது தண்டனை விதிக்கப்பட்டால் பதவி நீக்கம் செய்வேன் என்று கூறியிருக்கிறார்.

இதனால் நித்தியானந்தா தரப்பு அதிர்ச்சி அடைந்துள்ளதாம். இதையடுத்து தற்போது தனது நூற்றுக்கணக்கான ஆதரவாளர்களுடன் கொடைக்கானலில் ஒரு ரிசார்ட்டில் முகாமிட்டுள்ள நித்தியானந்தா அங்கிருந்து மதுரைக்கு ஓடி வந்துள்ளார். மதுரை ஆதீனத்தை சந்தித்த அவர், அவசரப்பட்டு எந்த முடிவையும் எடுத்து விடக் கூடாது என்று கேட்டுக் கொண்டதாக தெரிகிறது.

மதுரை ஆதீனம் சமீப காலமாக நித்தியானந்தா மீது அதிருப்தி அடைந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் நித்தியானந்தா தரப்பு அதிர்ச்சி அடைந்துள்ளதாகவும் கூறப்படுகின்றன. இப்படியே விட்டால் மதுரை ஆதீனம் அதிரடி முடிவுகளுக்குப் போய் விடலாம் என்ற பயத்தில்தான் மதுரைக்கு நித்தியானந்தா வந்து விட்டதாக தெரிகிறது.

இதற்கிடையே, மதுரை ஆதீனத்திற்குச் சொந்தமான சொத்துக்களில் தற்போது வாடகைக்கு இருந்து வருவோர், வசித்து வருவோர் என அனைவரையும் வெளியேற்றும் நடவடிக்கையில் நித்தியானந்தா இறங்கியிருப்பதாகவும் கூறப்படுகிறது. இதனால் மதுரை ஆதீன ஆதரவாளர்கள் பெரும் கவலையில் மூழ்கியுள்ளனராம்.

English summary
As the US court's sentence day is nearing, Nithyanantha who was camping in Kodaikanal has rushed to Madurai and indulged in deep discussion with Aadheenam.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X