For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மற்ற வீராங்கனைகளுக்கு கதவுகளைத் திறந்து விட்டுள்ளேன்.. கீதா பொகத்

Geeta Phogat
டெல்லி: லண்டன் ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொண்டுள்ளதன் மூலம் இந்தியாவின் வளரும் மல்யுத்த வீராங்கனைகளுக்கு நான் கதவுகளைத் திறந்து விட்டுள்ளேன். இதை அவர்கள் சரிவரப் பயன்படுத்திக் கொண்டு இந்தியாவுக்குப் பெருமை தேடித் தர வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்ற இந்தியாவின் முதல் பெண் மல்யுத்த வீராங்கனை என்ற பெருமையைப் பெற்றவரான கீதா பொகத்.

லண்டன் ஒலிம்பிக் போட்டியில் 55 கிலோ பி்ரீஸ்டைல் பிரிவில் பங்கேற்றார் கீதா. இருப்பினும் பதக்கம் வெல்லவில்லை. ஆனாலும் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்ற முதல் இந்திய மல்யுத்த வீராங்கனை என்ற சாதனையைப் பெற்று விட்டார்.

அவர் கூறுகையில், பெய்ஜிங் ஒலிம்பிக் போட்டியில் சுஷில் குமார் வெண்கலப் பதக்கத்தை வென்றபோது இந்தியாவில் மல்யுத்தப் போட்டி பெரும் பிரபலமடைந்தது. அதேபோல என்னுடைய அறிமுகம் மூலம் பெண்கள் மல்யுத்தப் போட்டிக்கு இந்தியாவில் நல்ல வாய்ப்புகள் கிடைக்கும் என்று நம்புகிறேன். இதை இளம் வீராங்கனைகள் பயன்படுத்திக் கொள்ள முன்வர வேண்டும் என்றார்.

சமீபத்தில் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியிடமிருந்து அர்ஜூனா விருதினைப் பெற்றார் கீதா என்பது நினைவிருக்கலாம்.

Story first published: Sunday, September 2, 2012, 13:10 [IST]
Other articles published on Sep 2, 2012
English summary
Geeta Phogat, the first female wrestler from India to qualify for the Olympics, Wednesday felt that she had opened doors for women wrestlers of the country to excel in the sport. Geeta participated in the London Olympics in the 55kg freestyle category but was unable to win a medal. "When Sushil (Kumar) won a bronze in Beijing, people took notice and their interest grew in the sport. I feel my participation has opened doors for other women to ome into the sport," said a delighted Geeta.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X