டேவிஸ் கோப்பை: மகேஷ் பூபதி- போபண்ணாவுக்கு 2 ஆண்டுகள் அதிரடி தடை

By:
Subscribe to Oneindia Tamil

Mahesh Bhupathi and Bopanna
டெல்லி: டேவிஸ் கோப்பைக்கான டென்னிஸ் போட்டிகளில் இந்தியாவின் சார்பில் மகேஷ் பூபதி மற்றும் ரோகன் போபண்ணா இருவரும் பங்கேற்க 2 ஆண்டுகளுக்கு இந்திய டென்னிஸ் சங்கம் அதிரடித் தடை விதித்துள்ளது.

லண்டன் ஒலிம்பிக் போட்டியி லியாண்ட பயஸுடன் இணைந்து விளையாடுவதற்கு பூபதியும் போபண்ணாவும் மறுத்திருந்தனர். இதனால் பெரிய சர்ச்சை ஏற்பட்டது. பின்னர் விஷ்ணுவர்தனும் பயஸும் இணைந்து விளையாடுவர் என்று அறிவிக்கப்பட்டது. இந்த ஈகோ விவகாரத்தினால் இந்திய டென்னிஸ் வீரர்கள் ஒலிம்பிக்கில் மண்ணைக் கவ்வ நேரிட்டது.

இந்த சூழலில் சண்டிகரில் அகில இந்திய டென்னிஸ் சங்க செயற்குழுக் கூட்டம் நடைபெற்றது. இதில் ஈகோ ஹீரோக்களான மகேஷ் பூபதி மற்றும் போபண்ணா இருவரும் இந்தியா சார்பில் டேவிஸ் கோப்பை போட்டிகளில் கலந்து கொள்ள 2 ஆண்டுகளுக்கு தடை விதிக்க முடிவு செய்யப்பட்டது.

அடுத்த டேவிஸ் கோப்பை மற்றும் ஆசிய- ஓசியானா போட்டிகளுக்கு இளம் வீரர்களை அனுப்பவும் டென்னிஸ் சங்கம் திட்டமிட்டிருக்கிறது. இந்த முடிவை பூபதி கடுமையாக எதிர்த்திருக்கிறார்.,

டிவிட்டரில் கருத்தை தட்டிவிட்டிருக்கும் பூபதி, டென்னிஸ் ஆடத் தெரியாத கோஷ்டி டென்னிஸ் சங்கம் என்று சாடியிருக்கிறார்.

English summary
As Indian youngsters continued to make India proud at the Davis cup, the All India Tennnis Association (AITA) shocked the tennis fraternity by imposing a two-year ban on Mahesh Bhupathi and Rohan Bopanna on Saturday, as per reports.
Please Wait while comments are loading...