தா.பாண்டியனுக்கு 80 வயது... வீட்டுக்குச் சென்று ஜெ. வாழ்த்தினார்

Posted by:
 
Share this on your social network:
   Facebook Twitter Google+    Comments Mail

சென்னை: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலச் செயலாளரும், முதுபெரும் அரசியல்வாதியுமான தா.பாண்டியன் இன்று தனது 80வது பிறந்த நாளைக் கொண்டாடினார். அவரை அவரது வீட்டுக்குச் சென்று முதல்வர் ஜெயலலிதா வாழ்த்தினார்.

தா.பாண்டியனுக்கு இன்று 80வது பிறந்த நாளாகும். இதை தனது வீட்டில் அவர் கொண்டாடினார். இதையடுத்து முதல்வர் ஜெயலலிதா இன்று பிற்பகல் 12 மணியளவில் சென்னை முகப்பேரில் உள்ள தா.பாண்டியன் இல்லத்திற்கு சென்றார். அங்கு தா.பாண்டியனை நேரில் சந்தித்து வாழ்த்துக் கூறிய அவர் பூங்கொத்தையும் அளித்தார்.

சமீபத்தில் டீசல் விலை உயர்வு, சமையஸ் கேஸ் மானியத்துக்குக் கட்டுப்பாடு ஆகியவற்றை எதிர்த்து தேசிய அளவில் இடதுசாரிகள் நடத்திய பந்துக்கு ஆதரவாக திமுகவும் களத்தில் குதித்தது.

ஆனால், அந்த பந்துக்கு அதிமுக ஆதரவு தெரிவிக்காத நிலையில், அன்றைய தினம் நடந்த ஆர்ப்பாட்டத்தில் உடல் நிலையைக் காரணம் காட்டி பாண்டியன் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Chief Minister Jaya greeted CPI state secretary Tha Pandian on his 80th birth day at his house.
Write a Comment