For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

குஜராத் அரசுடனான உறவுகளை புதுப்பிக்கிறது இங்கிலாந்து

By Mathi
Google Oneindia Tamil News

Narendra Modi
அகமதாபாத்: நரேந்திர மோடி தலைமையிலான குஜராத் மாநில அரசுடன் மீண்டும் உறவுகளைப் புதுப்பித்துக் கொள்ளப்போவதாக இங்கிலாந்து நாடு அறிவித்துள்ளது.

2002 ஆம் ஆண்டு குஜராத் கலவரத்தின்போது, அங்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த இங்கிலாந்தைச் சேர்ந்த சிலரும் கொல்லப்பட்டனர். இதையடுத்து, குஜராத் மாநில அரசுடனான உறவை இங்கிலாந்து துண்டித்துக் கொண்டது. அந்நாட்டைச் சேர்ந்த அமைச்சர்கள், உயர் அதிகாரிகள் குஜராத் செல்வதைத் தவிர்த்தனர். நரேந்திர மோடியும் இங்கிலாந்துக்கு போகாமல் இருந்தார்.

இந்நிலையில், லண்டனில் இங்கிலாந்தின் வெளியுறவுத் துறை அமைச்சர் ஹியூகோ ஸ்வைர் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கையில், குஜராத் மாநிலத்துக்குச் செல்லுமாறு இந்தியாவுக்கான இங்கிலாந்து தூதருக்கு உத்தரவிட்டுள்ளேன். இதன் மூலம், அந்த மாநில அரசுடனான உறவு வலுப்படும் என்று கூறியுள்ளார்.

இங்கிலாந்தின் இந்த அறிவிப்பு தொடர்பாக ட்விட்டர் தளத்தில் கருத்து தெரிவித்துள்ள மோடி, ஒரு நல்ல செயலை செய்யாமலே இருப்பதை விட, தாமதமாகவாவது செய்வது நல்லதுதான். குஜராத்துடன் உறவைப் புதுப்பித்துக் கொள்ள முடிவு செய்துள்ள இங்கிலாந்தின் முடிவை வரவேற்கிறேன் என்று கூறியுள்ளார்.

English summary
Ending a 10-year boycott of Narendra Modi imposed after the 2002 riots, the UK on Thursday said it has decided to resume engagement with Gujarat, prompting the Chief Minister to welcome the move as "better late than never".
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X