இஸ்லாமியர்களைப் போல அனைத்துப் பெண்களும் பர்தா அணிய வேண்டும் - மதுரை ஆதீனம்

By:
Subscribe to Oneindia Tamil

Madurai Aadheenam
மதுரை: இஸ்லாமியப் பெண்கள் எப்படி பர்தா அணிகிறார்களோ அதேபோல தமிழ்நாட்டுப் பெண்களும், ஒட்டுமொத்த இந்தியப் பெண்களும் பர்தா அணிய வேண்டும். இதன் மூலம் ஆண்களின் வக்கிரப் பார்வையிலிருந்து பெண்கள் தப்ப முடியும், பாலியல் குற்றங்களையும் குறைக்க முடியும் என்று மதுரை ஆதீனம் அருணகிரிநாதர் கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் அளித்த பேட்டியில், இஸ்லாயமிப் பெண்கள் பர்தா அணிவது வழக்கம். கணவரைத் தவிர வேறு யாரும் தங்களது உடலைக் கண்டு விடக் கூடாது என்பதற்காக இந்தக்கட்டுப்பாட்டை அவர்கள் கையாளுகின்றனர்.

இதேபோல தமிழ்நாட்டுப் பெண்களும், இந்தியப் பெண்களும் கூட பர்தா அணிய வேண்டியது அவசியம். இதன் மூலம் ஆண்களின் வக்கிரப் பார்வையிலிருந்து பெண்கள் தப்ப முடியும். மேலும், பாலியல் குற்றங்களையும் குறைக்க முடியும் என்றார் ஆதீனம்.

நித்தியானந்தா வர மாட்டார்

நித்தியானந்தா மீண்டும் மதுரை ஆதீன மடத்திற்குள் வரவே முடியாது. அவரை மக்களுக்கும் பிடிக்கவில்லை, அரசுக்கும் பிடிக்கவில்லை, யாருக்குமே பிடிக்கவில்லை. அவரை இளைய ஆதீனமாக நியமித்தபோது அவர் மீது வழக்குகள் குறித்து எனக்குத் தெரியாமல் போய் விட்டது.

மதுரை ஆதீனச் சொத்துக்களை சிலர் ஆக்கிரமித்துள்ளனர். அதை மீட்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் அருணகிரிநாதர்.

பொருத்தமான வரன் தேடுகிறீர்களா? தமிழ்மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!

English summary
Madurai Aadheenam Arunagirinathar has urged that like Muslim women, all women should wear burqa to avoid sex crimes.
Please Wait while comments are loading...