For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

விப்ரோ லாபம் 18% அதிகரித்து ரூ. 1,716 கோடியாக உயர்வு

By Chakra
Google Oneindia Tamil News

Wipro
பெங்களூர்: நாட்டின் மூன்றாவது மிகப் பெரிய சாப்ட்வேர் நிறுவனமான விப்ரோவின் காலாண்டு லாபம் 18 சதவீதம் அதிகரித்து ரூ. 1,716 கோடியாக உயர்ந்துள்ளது.

கடந்த ஆண்டு இதே காலாண்டின் அதன் லாபம் ரூ. 1,456 கோடியாக இருந்தது.

டிசம்பர் மாதத்துடன் நிறைவடைந்த இந்த நிதியாண்டின் 3வது காலாண்டில் விப்ரோவின் வருவாய் ரூ. 10,989 கோடியாக அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு இதே காலாண்டில் இது ரூ. 9,965 கோடியாக இருந்தது.

விப்ரோவின் ஐடி சர்வீசஸ் பிரிவில் இப்போது 1,42,905 பேர் பணியாற்றுகின்றனர். கடந்த 3 மாதங்களில் மட்டும் 2,336 பேரை கூடுதலாக பணியில் சேர்த்துள்ளது விப்ரோ. இதே காலகட்டத்தில் புதிதாக 50 வாடிக்கையாளர்களையும் பிடித்துள்ளது.

விப்ரோவின் கன்சூமர் கேர் மற்றும் மின் விளக்குப் பிரிவு கடந்த ஓராண்டில் 17 சதவீத வளர்ச்சியை எட்டியுள்ளது. இதன் வருவாய் ரூ. 1,028 கோடியாக உள்ளது.

English summary
Country's third largest software services firm Wipro on Friday reported 18 percent rise in its consolidated net profit to Rs 1,716.4 crore for the third quarter ended December 31, 2012. The Bangalore-based company had posted a net profit of Rs 1,456.4 crore in the year-ago period, it said in a filing to the BSE. Consolidated total income of the IT major was up by 10 per cent to Rs 10,989.1 crore for the October-December quarter in the current fiscal against Rs 9,965.1 crore in the same period of 2011-12 fiscal.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X